திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அதிர்ஷ்டம் இல்லாத விஜய், தனுஷ்.. துணிந்து கையில் எடுக்கும் சூர்யா, ஒரேடியா காலவாரிடாம பாஸ்!

Actor suriya: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கக்கூடிய விஜய் மற்றும் தனுசுக்கு நேர்ந்ததை எல்லாம் பார்த்தும், நடிப்பு அரக்கனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா துணிச்சலுடன் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். ஏற்கனவே கோலிவுட்டில் இருக்கக்கூடிய பல நடிகர்கள் சமீப காலமாகவே அந்த ஒரு விஷயத்தில் பயங்கரமாக அடிவாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சூர்யா மட்டும் மீண்டும் அதையே செய்வேன் என ஒற்றை காலில் நிற்கிறார்.

சூர்யாவின் முக்கியமான ஆசையே தனது நண்பர் விஜய் முந்த வேண்டும் என்பதுதான். ஏனென்றால் விஜய் மாதிரி ரசிகர்கள் எனக்கு வரவேண்டும் என்று ஆசை ரொம்ப நாளாக இருந்து வருகிறது. ஆனால் அவரால் மாஸ் ஹீரோவாக வர முடியவில்லை. சூர்யா தற்பொழுது நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read: சுதா கொங்கராவின் மெகா கூட்டணியில் உருவாகும் சூர்யா 43.. அதிரடியாக இணைந்த மலையாள இளம் சூப்பர் ஸ்டார்

அதுவும் ஃபுல் மசாலா படமாக அது இருக்கும். அங்கு தெலுங்கு ரசிகர்களை தனக்காக அதிகப்படுத்த வேண்டும், மார்க்கெட் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட அதிரடி முடிவை எடுத்துள்ளார். தமிழில் சூர்யா மசாலா படம் நடித்தால் அந்த படம் நிச்சயம் மொக்கையாக அமைந்துவிடும்.

இப்பொழுது தெலுங்கு பக்கம் செல்கிறார், என்ன நடக்கப் போகிறதோ! என இந்த விஷயத்தை அறிந்த அவருடைய ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர். ஏனென்றால் தெலுங்கில் அவரை ஒரேடியாக காலை வாரி விடாமல் இருந்தால் சரிதான். விஜய்யின் வாரிசு, தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் போன்ற படங்களை தெலுங்கு இயக்குனர்கள் தான் இயக்கியதால் அதில் தெலுங்கு வாடை அதிகமாகவே வீசியது.

Also Read: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

இது தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. இவர்களை எல்லாம் பார்த்தும் சூர்யா தெலுங்கில் மசாலா படம் நடிப்பேன் என முடிவெடுத்து இருப்பது எந்த விதத்தில் சரி என ஆதங்கப்படுகின்றனர். ‘குண்டு சட்டிக்குள்ளையே குதிரை ஓட்டக்கூடாது’ என்பதுதான் இப்போது சூர்யாவின் மனதில் முழுமையாக நிறைந்து இருக்கிறது.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக 3டி முறையில் தயாராகிக் கொண்டிருக்கும் கங்குவா படத்திற்கு பிறகு அவருடைய லெவல் எங்கேயோ போய்விடும். இதனால் தளபதிக்கு கிடைத்த ரசிகர்கள் தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விஜய் என்னெல்லாம் செய்கிறாரோ அதையே சூர்யாவும் ஃபாலோ செய்கிறார்.

Also Read: என்னது ரெண்டு இல்ல மூணு பாகமா.. சூர்யாவின் டங்குவாரை மொத்தமாய் பிதுக்கும் மிருகத்தனமான இயக்குனர்

Trending News