புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முரட்டுத்தனமாக உடம்பை மெருகேற்றும் சூர்யா.. ட்ரெண்டாகும் ஜிம் ஒர்க் அவுட் புகைப்படம்

சூர்யா இப்போது ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம் நடிப்பு, தயாரிப்பு மறுபக்கம் சமூக சேவை உள்ளிட்ட பல விஷயங்களிலும் அவர் அதீத ஆர்வம் காட்டி வருகிறார். அதனாலேயே இவருடைய ஒவ்வொரு செயலும் ரசிகர்களால் அதிகம் உற்று கவனிக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது சூர்யா முரட்டுத்தனமாக தன்னுடைய உடம்பை மெருகேற்றும் போட்டோ ஒன்று இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே இவர் நடிக்கும் படங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது வழக்கம். அது மட்டுமல்லாமல் கேரக்டராகவே மாற பல ரிஸ்க்கையும் இவர் எடுக்கக் கூடியவர்.

Also read: தன்னை வளர்த்தவரை மிரட்டிய சூர்யா.. காசு கண்ணை மறைக்குது, இயக்குனருக்கு நேர்ந்த கொடுமை

அந்த அளவுக்கு இவருடைய டெடிகேஷன் பலரையும் வியக்க வைக்கும். அந்த வகையில் தற்போது இவர் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் போட்டோ பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. தற்போது இவரின் நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து வெற்றிமாறனுடன் இவர் இணையும் வாடிவாசல் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மாத கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யாவும் அதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் காளைகளுடன் அவர் பயிற்சி எடுக்கும் ஒரு வீடியோவும் வெளியாகி பலரையும் மிரட்டியது.

Also read: லியோவுடன் போட்டி போடும் கங்குவா.. சூர்யாவின் மனக்குறையை போக்க படாத பாடுபடும் டீம்

அந்த வகையில் தற்போது சூர்யா தன் உடலை மெருகேற்றுவது கூட வாடிவாசல் படத்திற்காக தான் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா காக்க காக்க, சிங்கம் உள்ளிட்ட படங்களில் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு ஆகிய படங்களிலும் அவருடைய ஜிம் பாடி பலரையும் சுண்டி இழுத்தது.

முரட்டுத்தனமாக உடம்பை மெருகேற்றும் சூர்யா

surya-gym-photo
surya-gym-photo

ஆனால் கங்குவா படத்தின் முக்கிய காட்சிகளுக்காகவே சூர்யா இப்போது வெறித்தனமான ஒர்க் அவுட்டில் ஈடுபட்டுள்ளார். இப்படம் நிச்சயம் அவரை வேறொரு பரிமாணத்தில் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Also read: பல கோடிக்கு வியாபாரமான கங்குவா.. ரிலீசுக்கு முன்பே தெறிக்க விட்ட சூர்யா, சிவா கூட்டணி

Trending News