படங்களின் வெற்றி தோல்வி என்பது வணிக ரீதியானது. ஆனால் அதற்கும் நடிகர்களின் கலைத்திறமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது இயக்குனர்களைப் பொறுத்து, கதையைப் பொறுத்து படத்துக்குப் படம் மாறுபடும்.
அந்த வகையில் சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இப்படத்தை வைச்சு செய்தனர் ரசிகர்கள். சினிமா விமர்சகர்களும் கடுமையான விமர்சித்திருந்தனர்.
இப்படத்துக்கு நெகட்டிவ் ரிவியூக்கள் வந்தாலும் சூர்யாவின் திறமையின் மீதோ நடிப்பின் மீதோ, சிவாவின் திறமையின் மீது யாரும் சந்தேகிக்கவில்லை. இத்தனை கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் மக்களைச் சேர இன்னும் நேரம் எடுத்து, சிறப்பாக படமாக கொடுத்திருக்கலாம் என்பது எல்லோரது எதிர்பார்ப்பு ஆனால், அதை வெறுப்பாகப் பயன்படுத்தியது படக்குழுவை காயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் ஜோதிகா, நடிகர் மாதவன், இயக்குனர் சுசீந்தரன் ஆகியோர் கங்குவா படத்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கங்குவா விமர்சனங்களில் இருந்து சூர்யா மீண்டெழுந்து தற்போது சூர்யா 44 படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். அதேபோல், ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா45 படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் நிச்சயம் பேசப்படும் என என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சூர்யாவின் பாலிவுட் கனவு பலிக்குமா?
இதற்கிடையே சூர்யா நடிப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கர்ணா படத்தைப் பற்றி கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து சினிமாத்துறையினரின் பேசுபொருளாக இருந்தது. பாலிவுட் இயக்குனர் ஓம்பிரகாஷ் இயக்கவிருக்கும் இப்படத்தின் மூலம் சூர்யா ஹீரோவாக பாலிவுட்டில் அறிமுகமாவதாக தகவல் வெளியானது. மகாபாரத கதையின் அடிப்படையில் 600 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவிருப்பதாக தகவல் வெளியானது.
கர்ணா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கங்குவாவை விட அதிக பொருட்செலவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கங்குவா படத்தின் கலவையான விமர்சனத்தால் கர்ணா படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் அதிகப் பொருட்செலவில் பாலிவுட்டில் எடுகப்பட்டு வரும் படங்கள் சமீப காலமாக போதிய வரவேற்பு பெறாததால், கர்ணா படத்தை எடுத்தாலும் அதிக லாபம் ஈட்ட முடியாது; சூர்யாவுக்கு இந்தியில் மார்க்கெட் இல்லை இதெல்லாம் கருத்தில் கொண்டுத்தான் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ்மாக எதுவும் அறிவிக்கவில்லை.
சூர்யாவின் கையில் உள்ள கோல்ட்டான வாய்ப்புகள்!
ஒருவேளை சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ஹிட்டானால், கர்ணாவை புரடியூசர் தயாரிக்க முன்வரலாம் என தெரிகிறது. அதனால் கார்த்திக் சுப்புராஜின் சூர்யா 44, ஆர்.ஜே. பாலாஜியின் சூர்யா 45 ஆகிய படங்களில் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சூர்யா இருப்பதாக தகவல் வெளியாகிறது.
சூர்யா திறமையானவர் என்பதால் ஹிந்திக்குச் சென்றால் நிச்சயம் அவர் நடிக்கும் படம் ஹிட்டாகும். அதனால் கர்ணா படத்தை டிராப் செய்ய வேண்டாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் சூர்யா தியேட்டர் ரிலீஸில் ஹிட் கொடுத்தே 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவர் கதைகளை பார்த்து தேர்வு செய்ய வேண்டும் என சினிமா விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.