Suriya: கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தியேட்டரில் வெளியாகி இருந்தது சூர்யாவின் கங்குவா படம். சிறுத்தை சிவா இயக்கிய நிலையில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.
மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்த இந்த படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் ப்ரோமோஷனில் பேசி இருந்தார். ஆனால் படம் முதல் நாளிலிருந்து நெகட்டிவ் விமர்சனத்தை பெற தொடங்கியது.
சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய அடியாக கங்குவா படம் அமைந்துவிட்டது. இதுவரை 120 கோடி வசூல் செய்யவே படம் திணறி வருகிறது. இப்போது படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
சூர்யாவின் கங்குவா ஒடிடி ரிலீஸ் தேதி
அதாவது டிசம்பர் மாதம் 13ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கங்குவா ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தியேட்டரில் போனியாகாத நிலையில் ஓடிடியில் எந்த அளவுக்கு படம் போகும் என்பது சந்தேகம்தான்.
கங்குவா படம் வெளியான புதிதில் சத்தம் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க தவித்தனர். அதோடு இரைச்சல் அதிகமாக இருப்பதாகவும் மேக்கிங் சரியில்லை என்றும் கூறியிருந்தனர்.
அதன்பிறகு படத்தின் மியூசிக் அளவை குறைத்திருந்தனர். ஆனாலும் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இப்போது அமேசான் பிரைமில் பெரிய அளவு படம் கொண்டாடப்படாது என பலரும் கூறி வருகிறார்கள்.
தோல்விக்குப் பிறகு மிகவும் வேகமாக ஓட வேண்டும் என்பதற்கு ஏற்ப சூர்யா தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.