சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரத்தம் தெறிக்க காவு வாங்கும் சூர்யா.. மிரட்டும் கங்குவா டீசர்

Kanguva Teaser : சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் கங்குவா. 3d அனிமேஷனில் உருவாகி வரும் இந்த படம் கிட்டத்தட்ட பத்து மொழிகளுக்கு மேல் வெளியாகிறது.

Kanguva Sizzle Teaser | Suriya

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஆறு வேடத்தில் நடித்திருக்கிறார். திஷா பதானி, பாபி தியோல், கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா என பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் அங்கமாக இருக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாந்த் கங்குவா படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இப்போது வெளியாகி இருக்கிறது.

மிரட்டும் கங்குவா டீசர்

கப்பலில் தொடங்கி முதலை, குதிரை என கங்குவா டீசரில் அதகளம் செய்துள்ளனர். கையில் கத்தியுடன் ரத்தம் தெறிக்க பலரை வெட்டி சாய்கிறார் சூர்யா. பாகுபலி மிஞ்சும் அளவிற்கு சண்டைக்காட்சிகளை அள்ளித்தெளித்துள்ளார் சிறுத்தை சிவா.

மேலும் முதல் முறையாக சூர்யா வித்யாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்த டீசர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.

Trending News