வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

சென்சார் உத்தரவால் சூர்யாவுக்கு வந்த சோதனை.. பல வருஷம் கழித்து வெளிவரும் கங்குவா ரிலீஸில் சிக்கல்

பல கோடியில் படமெடுத்து அது ரிலீஸ் செய்வதற்கு முன் சர்ச்சையில் சிக்குவது தமிழ் சினிமாவில் சகஜம்தான். அந்த வகையில் கங்குவா படமும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க்ங்குவா. இப்படத்தில் சூர்யவுடன் இணைந்து பாபிதியோல், திஷா பதானி, யோகிபாபு, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

ரூ.350 கோடியில் சூர்யாவின் கேரியரில் அதிகப் பொருட்செலவில் உருவாகியுள்ள கங்குவா பட போஸ்டர், டிரையில், டீரர் இவை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் 38 மொழிகளில் 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ளது.

கங்குவா பட புரமோசன்

இப்படத்திற்கான புரமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், இப்படம் ரூ.2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியது டிரோலுக்கு உள்ளானது. இதையடுத்து, இப்படத்தின் சுவாரஸ்யமான தகவல்களை எல்லாம் படக்குழுவினர் வெளியிட்டு இப்படத்திற்கு நியாயம் செய்தாலும், அது ஓவர் ஹைப் ஏற்றும் செயல்தான் என விமர்சிக்கப்படுகிறது.

இப்படத்தில் சூர்யா மாடர்ன் மற்றும் அது என்ன காலம் என்றே சொல்ல முடியாத காலக்கடத்தில் நடக்கும் கதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இது பாகுபலி மாதிரி இருப்பதாக சிலர் விமர்சிக்க, சமீபத்தில், கேம் ஆப் த்ரான்ஸ் படத்தின் இன்ஸ்பிரேசனில் கங்குவா படத்தை எடுத்திருப்பதாக சிறுத்தை சிவா கூறியிருந்தார்.

இப்படம் வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்த நிலையில் ஏற்கனவே கரண் ஜோகர், விவேகா, மதன் கார்க்கி ஆகியோர் இப்படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் சிங்கில் பையர் சார் வெளியான நிலையில் சமீபத்தில் 3 வது பாடலான யோலோ வெளியாகி அதிகப் பார்வையாளர்களைப் பெற்று வருகிறது. இப்பாடல் இணையதளத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றாலும் இப்பாடலில் திஷா பதானி மற்றும் துணை நடிகைகள் அதிகக் கவர்ச்சியுடன் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சென்சார் குழு அறிவுறுத்தல்

எனவே யோலோ பாடலில் துணை நடிகைகள் கவர்ச்சியாக இருக்கும் காட்சிகளை நீக்கும்படி சென்சார் குழு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதன்படி, படக்குழு குறிப்பிட்ட காட்சிகளை நீக்கும், அல்லது மாற்றியமைக்கும் என தெரிகிறது.

இப்படத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சென்சார் குழுவின் இந்த ஸ்ட்ரிக் ஆக்சன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் இக்கவர்ச்சி காட்சிகளை நீக்கிவிட்டு புதிய காட்சிகளை சேர்ந்து மொத்த படத்தையும் படக்குழு எடிட் செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

சூர்யாவுக்கு வந்த சோதனை

குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் இப்படத்தை பார்க்க நேரும் என்பதால் இப்படத்தில் உள்ள கவர்ச்சிக் காட்சிகளை நீக்கும்படி சென்சார் குழு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஷாருக்கானின் பதான் படத்தில் நடித்த தீபிகா படுகோன் சர்ச்சைக்குரிய வகையில் ஆடை அணிந்ததாகக் கூறி பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது சூர்யாவின் கங்குவா படத்திற்கும் இதே பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்கும் துணிந்தவன் பட வெளியாகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்னும் தியேட்டரில் ரிலீஸாகி சூர்யாவின் படம் பல ஆண்டுகளாக எதுவும் வெற்றிபெறவில்லை. இப்படமும் ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News