ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பருத்திவீரனில் ஆட்டைய போட்ட அமீர்.. மொத்தமாக தோல் உரித்து காட்டிய சூர்யாவின் வலது கை

Paruthiveeran Director Ameer: அமீர் இயக்கிய படங்கள் அனைத்தும் நல்ல தரமான படமாக தான் இருந்திருக்கிறது. அப்படி இவர் எடுத்த முதல் படம் மௌனம் பேசியதே. இப்படம் சூர்யாவிற்கு நல்ல ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அடுத்ததாக ஜீவாவை வைத்து ராம் படத்தை இயக்கி இவரை தயாரிக்கவும் செய்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக கை கொடுக்கவில்லை.

இதனால் நஷ்டம் அடைந்த அமீர் அடுத்து கார்த்திக்கை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார். இப்படத்தில் தான் கார்த்தி முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். அதனால் இப்படத்தை சூர்யாவின் வலது கையாக இருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்தார். இதன் மூலம் எப்படியாவது இருக்கும் கடன் பிரச்சினையை தீர்த்து விட வேண்டும் என்று அமீர் பருத்திவீரன் படத்தை வெற்றி படமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.

அதே மாதிரி பருத்திவீரன் படமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும், கார்த்திக்குக்கு நல்ல வரவேற்பு அமைந்த வகையிலும் பல பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனால் இதற்கு இடையில் அமீர் இந்தப் படத்தின் மூலம் 2கோடி வரை ஆட்டையை போட்டு இருக்கிறார். அதாவது ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டிய இந்த ப்ராஜெக்ட்டை இரண்டு வருஷமாக இழுத்து அடித்திருக்கிறார்.

Also read: சுயமரியாதையை இழந்ததால் கொந்தளிப்புடன் பேசிய அமீர்.. நன்றியை மறந்த கார்த்தி

அத்துடன் நிறைய செலவுகளை இழுத்துவிட்டு தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் காட்டப்படும் பன்னிகளின் கணக்குகளை தாறுமாறாக காட்டி பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார். அதாவது 35 பன்னிகளை மட்டுமே வைத்து பயன்படுத்திவிட்டு தயாரிப்பாளரிடம் 250 பன்னிகளுக்கு கள்ளகணக்கு காட்டி இருக்கிறார்.

அதிலும் 70 பன்னிகள் இறந்து விட்டது என நஷ்ட கணக்கையும் காட்டி பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார். ஆக மொத்தத்தில் பருத்திவீரன் படத்தின் மூலம் அமீர்க்கு கிடைத்த சம்பளத்தை விட அவர் ஆட்டைய போட்டு லாபம் பார்த்து தான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் அந்த நேரத்தில் கடன் பிரச்சனையில் ரொம்பவே தத்தளித்ததால் இந்த மாதிரியான திருட்டுத்தனத்தை பண்ணி இருக்கிறார்.

இந்த விஷயத்தை தற்போது ஞானவேல் ராஜா பகிங்கரமாக அனைத்து பேட்டிகளிலும் பதிவிட்டு வருகிறார். அமிரால் முழுக்க முழுக்க நஷ்டம் அடைந்திருக்கிறோம். அதனாலேயே அவருடைய சகவாசம் வேண்டாம் என்று நாங்கள் மொத்தமாகவே ஒதுங்கி விட்டோம் என்று அமீரை பற்றி தோலுரித்துக் காட்டி வருகிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Also read: கொந்தளித்து மேடையிலேயே கோவப்பட்ட அமீர்.. சூர்யா கார்த்தி சண்டையைக் கிண்டிய பிரஸ்மீட்

Trending News