சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பௌலரா, பேட்ஸ்மேனா என ஆச்சரியப்பட வைத்த 4 வீரர்கள்.. 11வது இடத்தில் களமிறங்கி அதிரடி ஆட்டம்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எவராலும் கணிக்க முடியாது. சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாமல் விளையாடக்கூடிய விளையாட்டுதான் கிரிக்கெட். முன்னெல்லாம், நம்பர் 9,10,11 பேட்ஸ்மேன்கள் களமிறங்கினால், எதிரணியின் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகிவிடுவார்கள். ஏனென்றால், பவுலர்களின் விக்கெட்டை எளிதில் வீழ்த்தி விடுவார்கள். ஆனால் தற்போது கடைசி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் நிலைத்து நின்று விளையாடுகிறார்கள். அவ்வாறு விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரர்களின் தொகுப்பு.

இந்திய அணிக்கு எதிராக ஜேம்ஸ் ஆண்டர்சன்: முதலில் விளையாடிய இந்திய அணி 457 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்த தள்ளாடியது. பின்னர் 10-வது விக்கெட்டாக களமிறங்கிய ஆண்டர்சன் எதிர்முனையில் இருந்த ஜோ ரூட்டிற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து இருவரும் சேர்ந்து198 ரன்கள் சேர்த்தனர். ஜோ ரூட் சதம் விளாசினார். ஆண்டர்சன் 81 ரன்களை அடித்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

Andersan-Cinemapettai.jpg
Andersan-Cinemapettai.jpg

இங்கிலாந்து அணிக்கு எதிராக டினோ பெஸ்ட்: 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதிய டெஸ்ட் போட்டியில் டினோ பெஸ்ட் கடைசி விக்கெட்டாக களமிறங்கி 95 ரன்களை விளாசினார். தினேஷ் ராம்தினுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து 283 ரன்களிலிருந்து 426 ரன்களுக்கு அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Tino-Best-Cinemapettai.jpg
Tino-Best-Cinemapettai.jpg

வங்கதேசத்திற்கு எதிராக ஜாகிர் கான்: முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 393/9 என்ற வலுவான நிலையில் இருந்தது. அதன்பின் கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஜாகிர் கான்,மேலும் வலு சேர்க்கும் விதமாக சச்சினுடன் நன்கு பார்ட்னர்ஷிப் அமைத்து115 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டெண்டுல்கர் 248 ரன்கள் குவித்தார்.

Zaheer-Cinemapettai.jpg
Zaheer-Cinemapettai.jpg

பாகிஸ்தானுக்கு எதிராக ரிச்சர்ட் காலிங்: நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் காலிங் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் சேர்த்தார். அந்த போட்டியில் காலிங் நியூசிலாந்து அணி 402 ரன்களை எடுக்க பெரிதும் உதவினார்.

இங்கிலாந்துக்கு எதிராக அஷ்டன் அகர்: 2013ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அறிமுகமானவர் அஷ்டன் அகர். ஆஸ்திரேலிய அணி 117/9 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருந்த போது, கடைசி விக்கெட்டுக்கு பிலிப் ஹியூக்ஸுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.

aston-agar-cinemapettai.jpg
aston-agar-cinemapettai.jpg

அதிரடி ஆட்டம் ஆடிய ஆஷ்டன் அகர் 101 பந்துகளில் 98 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறு முனையில் பிலிப் ஹியூக்ஸ் 81 எங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஷ்டன் அகர் மற்றும் ஹியூக்ஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது இடத்தில் களமிறங்கிய ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதான்.

Trending News