வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஒரே வருஷத்துல இத்தனை படங்களில் நடிச்ச ஒரே நடிகர் இவருதான்! அதிலும் ரஜினி, கமலுடன் அதிக படங்கள்

தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்துள்ளனர். இருக்கின்றனர். அந்த வரிசையில், நடிகர் ஒருவர் ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். அவரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுருளிராஜன். சங்கரலிங்கம் என்ற இயற்பெயரை கொண்ட இவர், சினிமாவுக்காக வேண்டி முருகனின் பெயரான சுருளிவேலர் சுவாமி என்று மாற்றி வைத்துக் கொண்டார். மதுரையில் ஒருதொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே நாடகங்களிலும் நடித்து வந்தார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனியாத ஆசை அவரிடம் இருந்தது கொண்டிருந்தது. அதன்படி, 1959 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர், கலைஞரின் காகிதப்பூ நாடகத்தில் நடித்தார். அதன்பின், 1965 ஆம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தில் அவர் நடித்தார். இப்படத்தை ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக் கழகத்தால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே வருடத்தில் 50 படங்களின் நடித்த காமெடி நடிகர்

எம்ஜிஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடலில் இணைந்து நடித்திருந்தார். அதன்பின், காதல் படுத்தும் பாடு படத்திலும், 1970 ஆம் ஆண்டு திருமலை தென்குமரி, ஆதிபராசக்தி உள்ளிட்ட பல படன்களில் நடித்து 1970 – 1980 வரை புகழின் உச்சியில் இருந்தார்.

Surulirajan
Surulirajan

இப்படி தொடர்ந்து நடித்து வந்தவர், காஜாவின் மாந்தோப்புக்கிளியே என்ற படத்தில் கஞ்சன் கேரக்டரில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

இப்படி, சினிமாவில் வாய்ப்புக்காக ஏங்கியவர், வாய்ப்புக் கிடைத்த பின் அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையிலும் சினிமாத்துறையிலும் உயர்ந்தவர் தான் சுருளிராஜன். அவர் பேச்சும், உடல் அசைவுமே பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் படி இருக்கும் என்பதால் காமெடியை சொல்ல வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர். அவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உருவாகினர்.

இந்த நிலையில் 80 களில் பிஸியான காமெடி நடிகராக வலம் வந்த சுருளிராஜன், 1980 ஆம் ஆண்டில் மட்டும் 50 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். ஒரு நடிகர் ஒரே ஆண்டில் அத்தனை படங்களில் நடிப்பது அசாதரணமான விசயம் என்பதால் பலரும் அவரது திறமையை வியர்ந்து பேசி வருகின்றனர்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் பைரவி, ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், ஜானி ஆகிய படங்களிலும், கமலுடன் சரணம் ஐயப்பா ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவை ரசிகர்களின் பேவரெட் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News