திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டலை.. சர்வைவரில் கதறும் ஐஸ்வர்யா!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டப் கொடுத்துவரும் ஜீ தமிழின் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் சர்வைவர். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தன.

நான்கு வாரங்களுக்குப் பிறகு பல தடைகளைத் தாண்டி ரிவார்டு சேலஞ்சில் வெற்றி பெற்ற வேடர்களுக்கு ஒரு பெரிய தடபுடலான விருந்தே காத்திருந்தது. தொடர்ந்து நான்கு வாரமாக ரிவார்ட் சேலஞ்சில் தோற்று நல்ல சோறு கண்ணில் பார்க்காதவர்களுக்கு நேற்று ஒரு மிகப்பெரிய கறி விருந்தே நடந்தது அதில் அனைவரும் உணவை என்ஜாய் செய்தனர்.

ஆனால் இதில் ஐஸ்வர்யா மற்றும் நாராயணன் இருவரும் விருந்தை கண்டு கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தனர் ஏனெனில் இவர்கள் சைவ உணவுகள் மட்டும்தான் சாப்பிடுபவர்கள். இதற்கு இனிகோ பிரபாகரன் இத்தனை நாள் இது கூட இல்லாமல் கஷ்டப்பட்ட நமக்கு இதுவே பெரிது. வருத்தப்படாதீங்க அடுத்த முறையும் ரிவார்டு வின்பன்னி சைவ உணவுகள் தர சொல்லி கேட்கலாம் என ஆறுதல் கூறினார்.

அதேசமயம் காடர்கள் தீவுக்கு ஒரு ஸ்குரோல் வந்தது. அதில் ரிவார்டு சேலஞ்ச் தோல்விக்கு யார் காரணமோ அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என கூற, உமாபதி தானாகவே முன்வந்து தவறுக்கு நான்தான் காரணம், நானே தண்டனையை ஏற்கிறேன் என பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

Survivor-Aishwarya-cinemapettai
Survivor-Aishwarya-cinemapettai

மேலும் மற்றுமொரு ஸ்குரோல் இரண்டு தீவுக்கும் வர அதில் கடந்த காலத்தை குற்ற உணர்வில்லாமல் ஏற்றுக்கொண்டு, நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கையாண்டு, எதிர்காலத்தை தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள் என தத்துவத்தை அள்ளி தெளித்து, சுற்றி வளைத்து டாஸ்க் என்னவென்று போட்டிருந்தது.

இந்த டாஸ்க்கில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று ஜாடிகள் வைக்கப்பட்டிருக்கும். அதிலுள்ள தலைப்புகளில் அவர்களின் வாழ்க்கையில் நடந்ததை கூற வேண்டும் என்று ஒரு சூப்பர் டாஸ்க் வைக்க, அனைவரும் நன்றாகவே தங்கள் வாழ்க்கை நிகழ்வை பகிர்ந்தனர். வழக்கம் போல் அதிலும் காமெடி பையன் உமாபதி காமெடி செய்து கொண்டிருந்தார்.

Trending News