புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்வைவரில் விதிகளை மீறிய 2 போட்டியாளர்கள்.. ஒரு ஆக்ஷனும் எடுக்காத ஆக்சன் கிங் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.  16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முன்பின் தெரியாத தனி தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு பல விதிமுறைகள் உண்டு. உணவு, நெருப்பு தங்குமிடம் போன்றவற்றை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அந்த விதிமுறைகளில் ஒன்று.

மேலும் செல்போன் பயன்படுத்த கூடாது என்பது முக்கியமான விதிமுறையாகும். ஆனால் தற்போது இந்த விதிமுறைகளை போட்டியாளர்கள் சிலர் மீறியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களான விஜயலட்சுமி மற்றும் சரண் ஆகிய இருவரும் தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் செல்போன் வாங்கி பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும்  போட்டியாளர்கள் டூரிஸ்ட்கள் தரும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் வாங்கி உண்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை விஜயலட்சுமி பேசும் பொழுது தவறுதலாக இந்த தீவில் கிடைக்காத பொருளே இல்லை என்று கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்லும் நடிகர் அர்ஜுன் சில சமயங்களில் கண்டிப்பையும் காட்டுகிறார். சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கு அர்ஜுன் எந்த மாதிரியான பதிலை தருவார் என்று பார்ப்போம்.

survivor-contestants
survivor-contestants

Trending News