திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

சர்வைவரில் இனி காடர்கள், வேடர்கள் இல்லை.. டிஆர்பி-யை ஏற்ற பக்கா பிளான் போட்ட அர்ஜுன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் போலவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் கேம் ஷோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 16 போட்டியாளர் கொண்டு களமிறங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளார்கள்.

சமமான போட்டியாளர்கள் கொண்டு காடர்கள், வேடர்கள் என இரு அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியாளர்களை நடிகர் அர்ஜுன் வழிநடத்துகிறார். போட்டிகளில் வென்ற அணிக்கு பரிசுகளும், தோற்றவர் அணியிலிருந்து ஒருவரை எலிமினேட் செய்யப்படுவார்கள்.

எலிமினேட் செய்யப்பட்ட நபர் மூன்றாம் உலகத்திற்குச் சென்று அங்கு நடத்தப்பட்ட போட்டிகளில் தோற்றால் முழுமையாக சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெற்றி பெற்றவர்கள் மீண்டும் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்.

அவ்வாறு மூன்றாம் உலகத்திற்கு சென்ற அஜ்மத் வேடர்கள் அணிக்கும், விஜயலட்சுமி காடர்கள் அணிக்கும் மீண்டும் வந்துள்ளார்கள். இதனால் இரு அணிகளிலும் தலா 5 பேர்கள் உள்ளார்கள். சர்வைவர் நிகழ்ச்சியில் இதுவரை காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு அணிகளுக்கும் தனித்தனி குழுவாக போட்டிகள் நடத்தப்பட்டது.

காடர்கள் அணி மஞ்சள் நிறமும், வேடர்கள் அணி சிகப்பு நிறமும் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய ப்ரோமோவில் இனிமேல் காடர்கள், வேடர்கள் என்ற அணிகள் கிடையாது. இரு அணிகளும் இனிமேல் கொம்பர்கள் என அர்ஜுன் அறிவித்துள்ளார்.

arjun-survivor
arjun-survivor

கொம்பர்கள் என்பது முந்தைய ஆதிவாசி இனம் என்றும் இனிமேல் இரு அணிகளும் ஒன்றாக தான் இருக்கப் போகிறீர்கள் என கூறி உள்ளார். இனிமேல் மஞ்சள், சிகப்பு நிறம் கிடையாது. எல்லோருக்கும் நீல நிறம்தான் என அறிவித்துள்ளார். இதனால் சர்வையர் நிகழ்ச்சியில் இனிவரும் எபிசோடுகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News