புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக்பாஸுக்கு சவால்விட்ட சர்வைவர்! காடர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுவிதமான ரியாலிட்டி ஷோவாக சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த எபிசோடுகளில் இது சர்வைவர் நிகழ்ச்சியா அல்லது பிக்பாஸா என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர். அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டை போல இந்த காட்டுக்குள்ளே ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக இருந்தது. தற்போது சர்வைவர் நிகழ்ச்சி தனது நிஜ தோற்றத்தை வெளிக்காட்டியுள்ளது.

நிகழ்ச்சியில் நேற்று நடந்த இம்யுனிட்டி சவால் சற்றே கடினமான டாஸ்க் ஆக இருந்தது. வாட்டர் டப் போன்ற வடிவத்தில் செய்யப்பட்ட பெட்டியில் இரு அணியினர் சார்பாக இருவர் இருவராக மொத்தம் நால்வர் படுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் அவர்களுக்கு சிரமமான பொசிஷனில் படுத்திருந்தனர். ஒரு அணியை சேர்ந்த இருவருக்கு எதிர் அணியை சேர்ந்த மற்ற நபர்கள் கடலில் இருந்து நீரை எடுத்து வந்து அவர்கள் படுத்து இருக்கும் இடத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் நிறைய நிறைய மூக்கிற்கு வரத்தொடங்கியது. அதே நீரில் அதிக நேரம் யார் தம் கட்டி இருக்கிறாரோ அவரே வெற்றியாளர்.

இந்த டாஸ்கில் டப்பில் படுத்து இருப்பவர், கடல் நீரில் இருக்கும் அழுக்கையும், கடல் நீரின் நாற்றத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் மூச்சையும் தம் கட்ட வேண்டும். இதுபோன்ற சிரமத்தை டப்பில் படுத்திருந்தவர்கள் சமாளித்தனர். தண்ணீர் தூக்கி வருபவருக்கு ஜிக்ஜாக் வடிவத்தில் அமைக்கப் பட்டிருந்த கற்கள் மீது மட்டுமே காலை வைத்து தண்ணீரை தூக்கி வர வேண்டுமாம். ஒரு முறை தண்ணீரை தவறவிட்டால் மீண்டும் முதலில் இருந்து துவங்கி தூக்கி வந்து படுத்திருந்தவர்களின் டப்பை நிரப்ப வேண்டும்.

மிகவும் சாதுர்யமாக காடர்கள் அணி சவாலை சிறப்பாக சமாளித்தனர். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக் கனியைத் தட்டிப் பறித்தனர்.
இதில் வேடர்கள் அணி சார்பாக ஐஸ்வர்யாவும், vj பார்வதியும் கலந்து கொண்டனர். காடர்கள் அணி சார்பாக விஜயலட்சுமியும், லேடி கேஷும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் காடர்கள் அணி வெற்றி பெற்றது. இதுவே இந்த அணியின் முதல் வெற்றியாகும்.

survivor-cinemapettai5
survivor-cinemapettai5

காடர்கள் அணியின் இந்த வெற்றியை பிரபல பின்னணி இசையுடன் அணியினர் அனைவரும் தங்களின் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர். ஏற்கனவே பார்வதியை அணியினர் குறை பேசுவர். தற்போது வேடர்கள் அணி தோற்று விட்டதற்கு தன்னைதான் காரணம் காட்டுவார்கள் என்றும் தோற்றால் என்னை கை நீட்டி கொள்ளலாம் என்று பிளான் செய்து தான் என்னை இந்த சேலஞ்சில் இழுத்துவிட்டு இருக்கிறார்கள் என்றும் பார்வதி புலம்பி வருகிறாராம்.

ஆனால் பார்வதி இந்த டாஸ்க்கில் தன்னால் முடிந்த பங்கினைக் கொடுத்து போராடி உள்ளார் என்பதை வேடர்கள் அணியே ஒப்புக்கொண்டனர். தற்போது வேடர்கள் அணி தோல்வியை சந்தித்ததால், பார்வதி எலிமினேஷன் செய்யப்படுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

Trending News