திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அடுத்தடுத்து வெளியேறும் வலிமையான போட்டியாளர்கள்.. எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சர்வேயர் நிகழ்ச்சி

ஜீ தமிழில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சர்வைவர். இந்நிகழ்ச்சி 1997 இல் சுவீடன் நாட்டைச் சேர்ந்த சார்லி தமிழ் சினிமா பார்சன்ஸால் என்பவரால் உருவாக்கப்பட்ட ராபின்சன் என்ற நிகழ்ச்சியின் வடிவத்தை பின்பற்றுகிறது. இந்நிகழ்ச்சியில் ஒரு தனித்தீவில் 16 போட்டியாளர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.

சர்வைவர் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் சம அளவில் பிரிக்கப்பட்டு காடர்கள், வேடர்கள் என இரு அணிகளுக்கும் தனித்தனி தீவு கொடுக்கப்படுகிறது. இந்த இரு அணிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அதில் தோல்வி பெற்ற அணியில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்படுகிறார். எலிமினேட் செய்யப்பட்ட நபர் மூன்றாம் உலகத்திற்கு சென்று அங்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தப் போட்டிகளில் தோற்றால் நிரந்தரமாக சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் காடர்கள், வேடர்கள் இரு அணி ஒன்றாக பட்டு கொம்பர்களாக உள்ளார்கள். எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் ரைபிள் பஞ்சாயத்தில் காடர்கள் வேடர்கள் அணியையும், வேடர்கள் காடர்கள் அணியையும் நாமினேட் செய்கிறார்கள். ஆரம்பத்தில் இனிகோ வேடர்கள் அணியில் இருந்தாலும் அதிகமான நட்பு வட்டாரம் காடர்களில் தான் உள்ளது. இதனால் சென்ற வாரம் வேடர்கள் அணியில் இருந்து கடுமையான போட்டியாளர்களான சரண் மற்றும் ஐஸ்வர்யா எலிமினேட் செய்யப்பட்டார்கள்.

நேற்று நடந்த ரைபிள் பஞ்சாயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நந்தா எலிமினேட் ஆனார். தற்போது காடர்கள் அணியில் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்கள் வலிமையான போட்டியாளர் நந்தாவை நாமினேட் செய்துள்ளார்கள். இதனால் நந்தாவை விட வலிமையற்ற போட்டியாளர்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் உள்ளபோது சவாலான போட்டியாளர் நந்தாவை எலிமினேட் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

Trending News