புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாலியல் தொல்லையால் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன்.. போட்டியாளரின் பகீர் குற்றச்சாட்டு

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் விதமாக சர்வைவர் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜூன் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பல பிரபலங்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் சர்வைவர் போட்டியாளர்களில் ஒருவரான லேடி காஷ் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை வீடியோ மூலமாக லேடி காஷ் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நான் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகவில்லை. இங்கு மிகப்பெரிய சம்பவமே நடந்துள்ளது. அதனால் நான் நிகழ்ச்சியை விட்டு தேவையில்லாமல் வெளியேறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல், உடல் நலம் மற்றும் பாதுகாப்பு அலட்சியம் மன உளைச்சல் குறித்து விரைவில் மீடியாவில் கூறுவேன்” என கூறியுள்ளார்.

மேலும், “போட்டி நடைபெறும் டான்சானியா பகுதி கொரோனா பாதிப்பு இல்லாத இடம் என்பதால் முறையான பரிசோதனை இல்லாமல் போட்டியாளர்களை அனுமதித்துள்ளனர். பின்னர் போட்டியாளரின் வேண்டுக்கோளுக்கு இணங்க பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட சமயத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தோம்” என கூறியுள்ளார்.

lady-gash
lady-gash

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. அங்கு நடக்கும் விஷயங்களை நிச்சயம் மீடியா முன்பு வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். இது தொடர்பாக விரைவில் சென்னை வர உள்ளேன் என கூறியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News