திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மீண்டும் துவங்கப்படும் சர்வைவர் சீசன்2.. இம்முறையாவது ஆதரவு கிடைக்குமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் சர்வதேச அளவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை முதல் முதலில் தமிழ் தொலைக்காட்சியில் துவங்கியது.

அதிலும் குறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் சீசன் 1 நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதில் 20 போட்டியாளர்கள் பங்கேற்று 90 நாட்கள் யார் அடர்ந்த காட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டுமே வைத்து எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை வைத்து சிறந்த சர்வைவரை தேர்வு செய்வார்கள்.

இதில் கடந்த சீசனில் விஜயலஷ்மி வெற்றி பெற்று, ரூபாய் 1 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றார். எனவே சர்வைவர் சீசன்1 நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்கள் பலரும் அடுத்த சீசன் எப்போது துவங்கும் என்ற ஆர்வத்தில் காத்திருந்தனர்.

தற்போது இணையத்தில், அடுத்த சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும் அதற்காக போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியில் சர்வைவர் குழுவினர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்நிலையில் ஜீ தமிழில் மீண்டும் சர்வைவர் நிகழ்ச்சி துவங்கவுள்ளது என்பதை அறிந்த ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்துக்கே சென்று உள்ளனர். அத்துடன் இந்த சர்வைவர் நிகழ்ச்சி என்பது சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்(Survival of the fittest) என்ற கருத்தை மையமாக கொண்டு போட்டிகள் நடத்தப்படுவதால் சர்வைவல் நிகழ்ச்சிக்கு என்று தீவிர ரசிகர் கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

எனவே அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் முந்தின சீசனை விட திறமையான போட்டியாளர்களை தேர்வு செய்து, கடுமையான டாஸ்க்களை கொடுத்து நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக அனைத்துப் பணிகளையும் சர்வைவல் குழுவினர் மேற்கொண்டு இருக்கின்றனர். எனவே கூடிய விரைவில் சர்வைவல் சீசன்2 நிகழ்ச்சிக்கான முழுத் தகவல்கள் அடங்கிய புரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News