புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்வைவர் படப்பிடிப்பும் முடிஞ்சிருச்சு.. வெற்றியாளர் யாருன்னு தெரிஞ்சிருச்சு?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ சர்வைவர். முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பிரபல நடிகர்களே பணியாற்றுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸுக்கு நிகராகத் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

போட்டி தொடங்கிய முதல் நாளே போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து வித்தியாசம் நிறைந்த பல்வேறு டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் கரு என்னவென்றால், அடர்ந்த காடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான். அதாவது சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்(Survival of the fittest) என்றழைக்கப்படும் விஷயத்தை இந்நிகழ்ச்சி தனது கருவாகக் கொண்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அதில் இரண்டு நபர்கள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் கலந்து கொள்வர். 90 நாட்கள், காடுகளில் வசித்து, கொடுக்கப்படும் டாஸ்குகளில் வெற்றி பெற்ற ஒரு வெற்றியாளருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். தற்போது சர்வைவர் நிகழ்ச்சியின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் மாதம் 12ஆம் தேதியன்று முதல் எபிசோட் ஆனது ஒளிபரப்பாகியது. 90 நாட்கள் என்றால் குறைந்தபட்சம் டிசம்பர் மாதம் வரை இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் ஒளிபரப்பாக கூடும். இந்த சூழ்நிலையில், இந்நிகழ்ச்சியின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. தற்போது சிருஷ்டி டாங்கே, ராம், விஜே பார்வதி என சிலர் மட்டுமே எலிமினேஷன் ஆகியிருக்கும் நிலையில், மீதமுள்ள போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பதை அறிவதற்கு அனைவரும் ஆவலோடு உள்ளனர்.

vijayalakshmi-survivor
vijayalakshmi-survivor

சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் பற்றிய தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளர் நடிகை விஜயலட்சுமி என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே நடிகை விஜயலட்சுமியின் தெளிவான புத்தியும், தக்க சமயங்களில் இவர் திறமையை வெளி காட்டிய விதமும், டாஸ்குகளில் பொறுமையாகவும், கவனத்துடனும், கையாளும் விதமும் இவருக்கு வெற்றி கிடைக்க செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மேலும் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2இல் வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்து, அதன் பின் சிறிது நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். அதனால் தன்னை, இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானித்து முழுமூச்சாக செயல்பட்டு வெற்றியை தட்டிப் பறித்திருக்கலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

Trending News