ஜீ தமிழ் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ சர்வைவர், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பதினாறு நபர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் காடர்கள் மற்றும் வேடர்கள் என்று இரண்டு அணியாக பிரிக்கப்பட்டனர்.
கடந்த எபிசோடில் விஜயதசமி திருநாளை முன்னிட்டு காடர்கள் மட்டும் வேடர்கள் அணிக்கு சாப்பாட்டிற்காக ஏலம், பொருள்களுக்கான ஏலம் போன்றவை எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது கடிதத்திற்கான ஏலமும் நடந்தது. அதில் ஒவ்வொரு நபருக்கும் பிரியமானவர்கள் அந்த கடிதத்தின் வாயிலாக அவர்கள் கூற வந்த கருத்தை கூறுயிருப்பார்கள்.
விக்ராந்த் அந்த ஏலத்தை எடுத்தார் அப்போது ஆக்சன் கிங் அர்ஜுன் நீங்கள் எடுத்ததால் தங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று தாங்கள் எடுத்த ஏலத்திற்காக தங்களது கடிதத்தை மட்டும் வாங்கி கொள்ளலாம் அல்லது தங்களது கடிதத்தை தவிர்த்து மற்ற அனைவரின் கடிதத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தல் என்று இரு ஆப்ஷன்களை நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் விக்ராந்திற்கு வழங்கினார்.
அப்போது விக்ராந்த் பெருந்தன்மையாக அர்ஜுனின் 2 வது ஆப்ஷனை தேர்ந்தெடுத்தார். அதாவது அவரை தவிர்த்து மற்றவர்களின் கடிதத்தை அவர்களிடம் ஒப்படைத்தல் என்பதை தேர்ந்தெடுத்தார். இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் விக்ராந்தை பாராட்டி பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இவரது பெருந்தன்மையும், விட்டுக்கொடுத்துப் போகும் குணமும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் நாள்தோறும் உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. அனைவரும் அவரவருக்கு வந்த கடிதத்தை படித்து முடித்ததும், விக்ராந்தின் கடிதம் ஆக்சன் கிங் அர்ஜுன் கைகளில் இருந்தது.
அப்போது அவர் கடைசியாக விக்ராந்தின் கடிதத்தையும் விக்ராந்திடமே பாராட்டி ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் விக்ராந்தின் இரண்டு மகன்களும் க்யூட்டாக அவர்களது உணர்வை வெளிப்படுத்தினர். இதை பார்த்து ரசிகர்களின் மனம் நெகிழ்ந்து போனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.