புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சோசியல் மீடியாவில் தெறிக்கவிடும் சர்வைவர் VS பிக்பாஸ் மீம்ஸ்கள்!

தற்போதெல்லாம் விதவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அதன் மூலம் தனது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ள பார்க்கும் டிவி சேனல்கள், அதற்காகவே சினிமா பிரபலங்களை வைத்து வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் ரசிகர்களும் ரியாலிட்டி ஷோக்களை காண்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

அவ்வாறுதான் விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர். அக்டோபர் 3ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்படவுள்ளது அதைப்போல் சர்வைவர் நிகழ்ச்சி இப்போது ஜீ தமிழில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் இருந்தது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சுமார் 40 சீசன்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி தான் சர்வைவர். தற்போது இந்நிகழ்ச்சி முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் சர்வர் நிகழ்ச்சியையும் மீம்ஸ்களின் மூலமாக பங்கம் செய்து வருகின்றனர். அவர்கள் சூரிய வம்சம் படத்தில் சரத்குமாருக்கும் பிரியா ராமனுக்கும் இடையே நடக்கும் சீன்களை வைத்து மீம்ஸ் உருவாக்கி உள்ளனர்.

bb-vs-survivor
bb-vs-survivor

இதில், ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கும் நான் எங்க!’ என்று சர்வைவர் நிகழ்ச்சி கூறுவது போன்றும், ‘ஒரே டாஸ்கை மாற்றி மாற்றி ஒவ்வொரு வருடமும் கொடுக்கிற நீ எங்கே! என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை கேலி செய்துள்ளனர்.

bb-survivor-memes

அதேபோன்று வடிவேலுவை வைத்து மற்றொன்றில், சர்வைவல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட மூன்று நாட்கள் ஆஹா ஓஹோ என்று ஆர்வத்துடன் பார்த்த ரசிகர்கள், அதன்பின்பு அடுத்த இரண்டு நாட்களில் பார்க்கவே முடியாமல் வெறுத்துப் போய் விட்டனர் என்பதை உணர்த்தும் வகையில் மீம்ஸ் உருவாக்கி உள்ளனர்.

bb-memes
bb-memes

Trending News