நடிகர் சூர்யா தன்னுடைய 41-வது படத்தில் 20 வருடங்களுக்கு கழித்து நந்தா, பிதாமகன் படத்திற்குப் பிறகு 3வது முறையாக இயக்குனர் பாலாவுடன் இணைந்திருக்கிறார். எனவே இந்த படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரி, மதுரை, கோவா, போன்ற மூன்று இடங்களிலும் சூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது.
இதில் சூர்யாவுக்கு கதாநாயகியாக கீர்த்தி ரெட்டி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யா மீனவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீனவன் கதாபாத்திரம் என்றதுமே இது இலங்கை, தமிழர் பிரச்சனையா என்று கேட்காதீர்கள் இப்பொழுது அந்த படத்தில் அவுட் லைன் ஸ்டோரி வெளிவந்துள்ளது.
படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம். தந்தை மகன் கதாபாத்திரம். மகன் கன்னியாகுமரியில் படகோட்டும் மீனவன். மகனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ரெட்டி நடிக்கிறார். தந்தை கதாபாத்திரம் கோவாவில் சூட்டிங் நடைபெறுகிறது. இவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார்.
இவருக்கு வயதான கதாபாத்திரம் இல்லையாம் பிளாஷ்பேக் காட்சிகளில் சூர்யா, ஜோதிகா நடிக்கின்றனர். அதாவது படத்தின் கதை சுனாமி வந்ததுக்கு அப்புறம் தெரியும் கதை தானாம். சுனாமியில் பிரிந்த குடும்பம், மகன் சூர்யா என்ன ஆனார் என்பது தான் கதை.
எனவே இந்த இரண்டு வேடங்களிலும் நடித்து முடிக்க சூர்யா 60 நாள் வரை கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறாராம். எனவே விறுவிறுப்பான இந்த கதைக்களத்தை கொண்ட சூர்யாவின் 41-வது திரைப்படம் திரையில் வருவதற்காக அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி தற்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் 41-வது படத்தின் கதையையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலா சூர்யாவிடம் எப்படி எல்லாம் டெரர் காட்டுக்கிறார் என்பதை பற்றிய பிரச்சினையையும் சோசியல் மீடியாவில் தற்சமயம் ட்ரெண்ட் கொண்டிருக்கிறது.