அதிரி புதிரியாக டைட்டிலை வெளியிட்ட சூர்யா 42 டீம்.. ட்ரெண்டாகும் வீடியோ

Surya42
Surya42

கடந்த சில நாட்களாகவே சூர்யா 42 திரைப்படத்தை பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் 10 மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகும் இப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த படத்தின் டைட்டில் பற்றிய எந்த அறிவிப்பும் வராமலேயே இருந்தது. இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9.05 மணி அளவில் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

Also read: மீண்டும் இணையும் ஆயுத எழுத்து கூட்டணி.. டாப் ஹீரோயினை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய படக்குழு

இதனால் பூரித்துப் போன ரசிகர்கள் இதை சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் படத்திற்கு இதுதான் தலைப்பு என்று சில பெயர்களையும் கூறி வந்தனர். அந்த வகையில் கருடா என்ற பெயர் வைக்கப்படும் என்ற ஒரு தகவலும் தீயாய் பரவியது. மேலும் பட குழுவினரும் போர் வீரன் வருகிறான் என்ற வாசகத்தோடு ஒரு போஸ்டரையும் வெளியிட்டு இருந்தனர்.

அதில் குதிரையில் அமர்ந்திருக்கும் வீரன் ஒருவன் மலை உச்சியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தாவுவது போன்ற போட்டோ இடம் பெற்றிருந்தது. இது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த அந்த டைட்டிலை பட குழு வெளியிட்டுள்ளனர்.

Also read: வி சென்டிமென்ட்டில் இருந்து விலகிய சிறுத்தை சிவா.. சூர்யா 42 டைட்டில் இதுதான்!

அந்த வகையில் இப்படத்திற்கு கங்குவா என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வீடியோவை வெளியிட்டுள்ள பட குழு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் படம் அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

Advertisement Amazon Prime Banner