திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜெய்பீம் படத்தை மிஸ் செய்த முன்னணி நடிகர்.. நல்லவேளை அவர் நடிக்கல

கடந்த சில வருடங்களாகவே மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த சூர்யா கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தன்னுடைய சினிமா முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளார்.

சூர்யாவின் சிறந்த படங்களில் ஒன்றானது சூரரைப்போற்று. இந்த படம் சூர்யாவின் சினிமா கரியரில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். வழக்கமான மாஸ் படங்களாக இல்லாமல் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த தீபாவளிக்கு வெளியான ஜெய் பீம் திரைப்படம் சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டது என்றே கூறலாம். இந்த படத்தில் பேசப்பட்ட கதையும் கதைக் கருவும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இருளர் மக்களின் உணர்வை மிக அழுத்தமாக சொன்ன படம் என்று கூடச் கூறலாம்.

இப்படிப்பட்ட படத்தில் முதலில் சூர்யாவை ஒரு கெஸ்ட் ரோலில் தான் நடிக்க இருந்தார் எனவும் அவர் படத்திற்குள் வந்த பின்னர் தான் சூர்யாவின் கதாபாத்திரம் திருத்தி அமைக்கப்பட்டது என்பது தெரிந்த ஒன்றே. ஆனால் முதன் முதலில் இந்த படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகவில்லை எனவும் சூர்யா தயாரிப்பது மட்டும்தான் உறுதியாகியது எனவும் சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசலாம் என யோசித்தார்களாம். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பின்னர் சூர்யா தானே அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டு விட்டார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நல்ல வேளை இந்த கதையில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். பின்னர் அயன் மேன் டப்பிங்கில் விழுந்த அடி இன்னமும் எந்திரிக்க முடியவில்லை.

suriya-jaibhim

Trending News