புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூர்யா, எனக்கு அந்த நடிகைதான் வேணும்.. அடம்பிடிக்கும் பாலா

பிதாமகன் மற்றும் நந்தா ஆகிய படங்களுக்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து சூர்யா, பாலா இருவரும் புதிய படம் ஒன்றில் இணைய உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செய்தியாக அமைந்தது. பாலா படத்தை முதலில் தயாரிக்க விரும்பிய சூர்யா அந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு நானே நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

சூர்யாவின் சினிமா கரியரில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்கள் என்றால் பிதாமகன் மற்றும் நந்தா ஆகியவற்றைச் சொல்லலாம். நந்தா படத்தில் எந்த அளவுக்கு முரட்டுத்தனமான நடிகராக இருந்தார் பிதாமகன் படத்தில் அதற்கு நேரெதிராக செம ஜாலியான ஆளாக நடித்து தன்னால் எப்படிப்பட்ட கதாபாத்திரமும் செய்ய முடியும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து நட்சத்திர நாயகனாக உயர்ந்தார் சூர்யா.

ஆனால் அந்த படங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நீண்டகாலமாக இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். அதுமட்டுமில்லாமல் சூர்யாவும் தன்னுடைய படங்களின் கதையை மாற்றி கமர்சியல் நாயகனாக மாறினார். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சூர்யா கமர்சியல் நாயகனாக நடித்த படங்களை விட கதையின் நாயகனாக நடித்த படங்கள்தான் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது.

இதை சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் அவருக்கு உணர்த்தும். இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலா படத்தில் யாரை நடிக்க வைப்பது என்ன பெரிய குழப்பம் நிலவிய நிலையில் தற்போது அந்த படத்திற்கு கீர்த்தி சுரேஷ்தான் வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்து கொண்டிருக்கிறாராம் பாலா.

பாலா படங்களில் ஹீரோயின்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நல்ல வெள்ளை வெள்ளை என்று அழகாக இருக்கும் பெண்களை கூப்பிட்டு அவர்களது தோற்றத்தை மாற்றி விடுவார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஐட்டம் வைத்திருக்கிறார் என்பது தான் தெரியவில்லை.

கண்டிப்பாக கீர்த்தி சுரேஷ் எப்பவும் போல் அழகாக இருக்க மாட்டார் என்பது மட்டும் உறுதி. எது எப்படியோ சூர்யா மற்றும் பாலா படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சரித்திர சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News