புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாடிவாசல் ஷூட்டிங் ஒத்திவைப்பு.. வெற்றிமாறனின் லூட்டியால் உருவான காரணம்

வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் உருவாகயிருந்த வாடிவாசல் திரைப்படம், மேலும் இரண்டு வருடங்கள் தள்ளி போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகி வருகிறார்.

மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று கதை களம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதால் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை இரண்டு வருடங்கள் கழித்து ஆரம்பிக்கலாம் என சூர்யா வெற்றிமாறனிடம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே வெற்றிமாறனுக்கு ஒப்புக்கொண்டு தனது அடுத்தடுத்த படங்களின் பணிகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஒத்திவைப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்றாண்டுகளாக இயக்கி வரும் நிலையில் கடைசி கட்ட படப்பிடிப்பில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கமிட்டாகி உள்ள விஜய் சேதுபதியை வைத்து வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். மேலும் தெலுங்கில் என்.டி.ஆர் நடிப்பில் 30 கோடி ருபாய் சம்பளத்தில் புதிய படத்தை இயக்கவும் வெற்றிமாறன் ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவை ஜல்லிக்கட்டு காளையோடு பயிற்சி எடுக்க சொல்லிவிட்டு வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்துள்ளார். மேலும் அவருடைய மற்ற திரைப்படங்களை இயக்க ஆயத்தமாகி வந்துள்ளார். இதனையறிந்த சூர்யா நாசுக்காக வாடிவாசல் படத்தை 2வருடங்கள் கழித்து ஆரம்பிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் சூரி விடுதலை படத்திற்காக 3 வருடங்கள் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் மற்ற படங்கள் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் விஜய் சேதுபதி விடுதலை படத்திற்காக 20 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த நிலையில் 80 நாட்கள் வரை வெற்றிமாறன் நடிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் தனக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்ற அச்சத்தில் சூர்யா அவரே முன்வந்து வாடிவாசல் படத்தை தள்ளிவைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News