விஜய் அஜித் எல்லாம் தற்போது தான் ஒரே இயக்குனர் இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்கள் வரை நடிக்கிறார்கள். ஆனால் நடிகர் சூர்யா அப்போதே ஒரே இயக்குனர் இயக்கத்தில் அடுத்தடுத்து 5 படங்களில் நடித்துள்ளார். அந்த இயக்குனர் வேறு யாருமல்ல தனது விறுவிறுப்பான கதை களங்களால் தமிழ் சினிமாவை தெறிக்கவிட்ட இயக்குனர் ஹரி தான்.
நடிகர் சூர்யா மற்றும் ஹரி காம்போவில் வெளியான ஆறு, வேல், சிங்கம் 1, 2, 3 ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றன. ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஆக்சன், காதல், சோகம், காமெடி என முழுக்க முழுக்க பேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக வெளியான இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரின் காம்போவில் ரசிகர்கள் அடுத்தடுத்து படங்களை எதிர்பார்த்தனர். அதன் காரணமாக ஹரி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் அடுத்ததாக அருவா என்ற படத்தில் இணைய இருந்தனர். ஆனால் அந்த படத்தின் கதை நடிகர் சூர்யாவுக்கு பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார்.
இதனால் இயக்குனர் ஹரி சூர்யா மீது அதிருப்தி அடைந்தார். மேலும் நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் இருவரின் நட்புக்கு இடையே விரிசல் உண்டானது. அன்றில் இருந்து தற்போது வரை இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிபோல நடந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாம்.
அதன்படி சண்டையை மறந்து சமாதானமான நிலையில் இயக்குனர் ஹரியை தங்களது நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது, சூர்யாவின் குடும்ப நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் தயாரிப்பு நிறுவனம். இயக்குனர் ஹரி யானை படத்தை முடித்த பின்னர் ஸ்டியோ கிரீன் நிறுவனத்திற்கு படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.