வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிவகுமாரையே ஏமாற்றும் கார்த்தி, சூர்யா.. தேரை இழுத்து தெருவுல விட்ட ஞானவேல்

Sivakumar: நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவர். ரஜினி மற்றும் கமல் இருவருக்குமே முன்னாடி சினிமாவுக்கு வந்தவர். எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாத நடிகர் என்ற பெயரை இவர் வாங்கியிருக்கிறார். இன்றுவரை மகாபாரதம், ராமாயண கதைகளை வாழ்வியலோடு இணைத்து சொற்பொழிவு ஆற்றி வருகிறார். சமீபத்தில் சிவகுமாரின் பெயர் ரசிகர்களிடையே டேமேஜ் ஆகி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் பருத்திவீரன் சர்ச்சை தான். அமீர் என்னும் அற்புதமான இயக்குனர் மீது ஞானவேல் ராஜா வீசிய கல், பட்டது என்னவோ சிவக்குமார் மேல் என்று ஆகிவிட்டது. ஞானவேல் ராஜாவிடம் ஆரம்பித்த பிரச்சனை, கார்த்தி மற்றும் சூர்யா என வந்து இப்போது கண்ணியத்திற்கு பேர் போன நடிகர் சிவகுமாரின் தலையில் இடியாய் விழுந்திருக்கிறது.

பேச்சை கேட்காத பிள்ளைகள்

சிவக்குமார் உண்மையில் 15 வருடத்திற்கு முன்பே இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் அமீரிடம் படத்தை நியாயமான முறையில் எழுதி வாங்கியதோடு, சூர்யா மற்றும் கார்த்தி இடம் அமீர், உண்மையான கலைஞன், அவன் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறான், அவனுக்கு சேர வேண்டிய பணத்தை சரியாக கொடுத்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:களி மண்ணாய் இருந்தவர்களை செப்பு சிலையாய் மாற்றிய அமீர்.. நன்றி கெட்ட உலகமடா?.

சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து சும்மா பேருக்கு சிவகுமார் சொன்னதுக்கு சரி என்று தலையாட்டி இருக்கிறார்கள். ஆனால் அப்பா சொன்னதை கேட்காமல் 15 வருடங்களாக இந்த பிரச்சனையை கிடப்பில் போட்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், ஞானவேல் ராஜா பேட்டியின் போது மொத்த பிரச்சனையும் வெளியே வந்துவிட்டது..

தற்போது பிரச்சனை பெருசாகி இருக்கும் நிலையிலும் சிவகுமார் கார்த்தி மற்றும் சூர்யாவை அழைத்து இப்போது ஆவது அமீரின் பணத்தை செட்டில் பண்ணி விடுங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறார். ஆனால் அண்ணன் தம்பி இருவரும் ஒரே மாதிரி அப்பாவிடம் நீங்கள் அமைதியாக இருங்கள், நாங்கள் இந்த பிரச்சனையை பார்த்துக் கொள்கிறோம் என்று அவரை சைலன்ட் மோடில் வைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த சிவகுமார் தன் சொந்த வீட்டு பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். என்னதான் அப்பாவுக்கு பெரிய அளவில் மரியாதை கொடுப்பது போல் காட்டிக் கொண்டாலும் சூர்யா மற்றும் கார்த்தி இந்த விஷயத்தில் அவரின் வார்த்தையை மீறி இருக்கிறார்கள். கடைசியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது என்னவோ சிவகுமார் தான்.

Also Read:கிடைத்த ஹீரோவை வைத்து அமீர் எடுத்த 5 படங்கள்.. அனைத்திலும் முதல் சாய்ஸ் சூர்யா

Trending News