புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விருது கிடைத்தும் சந்தோஷப்பட விடாமல் சூர்யாவை துரத்தும் பிரச்சனை.. குடைச்சல் கொடுக்கும் கும்பல்

சூர்யா தனது கடின உழைப்பை போட்டு ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். பல வருடமாக அவர் சினிமாவில் இருந்தாலும் இப்போது தான் தனக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். மேலும் சமீபத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் சூரரைப் போற்று படம் மொத்தமாக ஆறு தேசிய விருதுகளை குவித்துள்ளது. இதனால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தேசிய விருது கமிட்டியில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை இருக்கிறார்.

Also Read :கேஜிஎஃப் பாணியில் சூர்யாவின் 42-வது படம்.. மாஸாக வந்து பூஜை போட்ட ரொலெக்ஸ் புகைப்படம்

அதாவது ஒரு படத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில் இல்லாதவர்கள் தான் இதில் உறுப்பினராக செயல்பட முடியும். அப்படி ஒரு கடிதத்தை கமிட்டியில் இருப்பவர் கொடுக்க வேண்டும். ஆனால் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை அது போன்ற கடிதம் எதுவும் கொடுக்க வில்லையாம்.

இதனால் தேசிய விருது பெற்ற சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை எப்படி இதில் உறுப்பினராக இருக்க முடியும் என சில கும்பல் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் ஓடிடியில் வெளியாகி சாதனை படைத்த வருகிறது.

Also Read :ஒரே திரையில் பட்டையைக் கிளப்ப வரும் டில்லி, ரோலக்ஸ்.. லோகேஷ் செய்ய காத்திருக்கும் சம்பவம்!

அதுமட்டுமல்லாமல் சூரரைப் போற்று படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சூர்யா மீது கடும் கோபத்தில் இருந்தனர். இதன் வெளிப்பாடாக தற்போது ஒரு சம்பவம். சூர்யாவின் வளர்ச்சி பிடிக்காத சிலர் இந்த விஷயத்திற்கு எதிராக கேஸ் போட்டுள்ளனர்.

இதனால் விருது கிடைத்தும் சந்தோஷப்பட முடியாமல் சூர்யா தவிர்த்து வருகிறார். மேலும் இவ்வாறு சிலர் தொடர்ந்து சூர்யாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து சூர்யா கண்டிப்பாக சினிமாவில் ஜொலிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read :கல்லா கட்ட வித்தியாசமாக ரிஸ்க் எடுக்கும் சூர்யா.. எதிர்பார்ப்பை கிளப்பிய சிறுத்தை சிவா கூட்டணி

Trending News