ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

உங்க சங்காத்தமே வேண்டாம்.. தேடிவந்த இயக்குனரை துரத்தி விட்ட சூர்யா

சூர்யாவுக்கு இந்த வருடம் அமோகமாக இருக்கிறது. வருடத்தின் ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளி வந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதற்கு அடுத்து இவர் கேமியோ ரோலில் நடித்த விக்ரம் திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அதேபோன்று தற்போது அவர் நடித்து வரும் சூர்யா 42 திரைப்படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தேசிய விருது பெற்ற உற்சாகத்தில் இருக்கும் சூர்யா தரமான படங்களை தயாரிப்பது என்று நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக இருக்கிறார். அதில் அவர் நடித்து வந்த வணங்கான் திரைப்படம் சமீபத்தில் ட்ராப் ஆனது மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Also read : நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த டாப் 10 படங்களின் லிஸ்ட்.. இப்பவும் மறக்க முடியாத தளபதி தேவா, சூர்யா

ஆனால் சூர்யா அதை எல்லாம் யோசிக்காமல் தற்போது அடுத்த கட்ட வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்து வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே திரைப்படம் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறதாம். அப்படம் வெளியாகி இப்போது 20 வருடங்கள் கடந்து இருக்கிறது.

அதை நினைவு கூறும் வகையில் சமீபத்தில் ஒரு நன்றி அறிக்கை வெளியிட்ட இயக்குனர் அமீர் அதை இரண்டாம் பாகமாக உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். இது குறித்து சூர்யாவிடம் பேசிய அவர் சம்மதமும் வாங்கி இருக்கிறார். சூர்யாவுக்கும் இந்த யோசனை ரொம்பவும் பிடித்துப் போனதால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

Also read : சிக்ஸ்பேக் நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா.. மிரர் செல்ஃபியால் மிரண்டுபோன இணையதளம்

ஆனால் இப்போது சூர்யா, பாலாவால் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து விட்டதால் அவர் சம்பந்தப்பட்ட வகையறாக்களே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம். ஏனென்றால் அமீர், பாலா இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஆனால் இப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பல மனஸ்தாபங்கள் இருக்கிறது.

ஆனாலும் சூர்யா இப்போது அமீர் இயக்கத்தில் நடிக்க தயாராக இல்லையாம். சூர்யாவின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியான அமீர் தற்போது வேறு ஹீரோவை தேடும் வேட்டையில் இறங்கி விட்டாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்புக்காக இப்படி எந்த ஒரு சிக்கலிலும் சிக்காமல் சூர்யா இப்போது தரமான முடிவெடுத்து வருவது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

Also read : வணங்கான் கைவிட்டாலும் சூர்யா அடுத்தடுத்து கமிட்டான 5 படங்கள்.. சமரசமாக முடிந்த அருவா மோதல்

Trending News