திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே மாதிரியான கதையில் கமிட் ஆகிய சூர்யா.. கைவசம் இருக்கும் 3 படங்கள்

Surya Commited in the same story: சூர்யா நடிப்பில் கடந்த வருடம் எந்த படங்களுமே வெளிவரவில்லை. அதற்கு முன்னதாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. ஆனாலும் தற்போது சூர்யா நடித்து கொண்டிருக்கும் கங்குவா படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் வந்து அனைவரையும் கவர்ந்தது தான்.

கிளைமாக்ஸ் காட்சியில் ஐந்து நிமிடங்கள் வந்தாலும் அதன் மூலம் அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். இந்த ஒரு விஷயத்தை வைத்து அடுத்துக் கொடுக்கப் போகும் கங்குவா படம் மிக தரமானதாக இருக்க வேண்டும். அத்துடன் ரசிகர்கள் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக பான் இந்தியா படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதில் இவருடைய கெட்டப் ரொம்பவே வித்தியாசமாகவும், 3டி தொழில்நுட்பத்துடனும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இப்படம் முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். இப்படம் எந்த அளவிற்கு ஒரு பீரியட் படமாக இருக்கப் போகிறதோ, அதே மாதிரி அடுத்த படங்களும் இது சம்பந்தமாகவே ஒரே மாதிரியான கதையை நோக்கி பயணித்து வருகிறார்.

Also read: சைலன்ட் மோடில் இருக்கும் விஜய், சூர்யா.. சொன்னதை நிறைவேற்றிய ரஜினியின் சிஷ்யன்

இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இப்படமும் பீரியாடிக் கதையாகவும் பாலிவுட்டின் பிரம்மாண்டமான படம் என்று சொல்லும் அளவிற்கு உருவாகப் போகிறது. மேலும் இப்படத்தை மகாபாரத கதையை மையமாக வைத்து எடுக்க இருக்கிறார்கள்.

அடுத்ததாக சூர்யாவின் 43 வது படத்தை சுதா கொங்காரா எடுக்கப் போகிறார். ஏற்கனவே இவர்கள் காம்போவில் சூரரைப் போற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து தேசிய விருது வாங்கும் அளவிற்கு வெற்றி பெற்றது. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் உருவாகும் போகும் சூர்யாவின் 43வது படத்தின் கதை 1990 இல் நடந்த வரலாற்று கதையாக இருக்கப் போகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.

ஆக மொத்தத்தில் தற்போது சூர்யா கமிட் ஆகியுள்ள படங்களில் 3 படங்கள் கிட்டத்தட்ட வரலாற்று படமாக ஒரே மாதிரியான கதையை மையமாக வைத்து இருக்கப் போகிறது. இதையெல்லாம் முடித்த பிறகு தான் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்தப் போகிறார். அடுத்து ரோலக்ஸ் கூட கூட்டணி வைக்கப் போகிறார்.

Also read: சூர்யாவுக்கு பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்ல.. பாலாவை விட்டுட்டு அமீர் கூட சண்டை போட இதுதான் காரணம்

Trending News