வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தமிழ் ரசிகர்களுக்கு டாடா காட்டிய சூர்யா.. இனி சின்ராச கையிலையே பிடிக்க முடியாது

1997ம் ஆண்டு திரையுலகில் இயக்குனர் வசந்த் மூலமாக அறிமுகமானார் நடிகர் சூர்யா. இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். ஆரம்பத்தில் 8 பிளாப் படங்களை கொடுத்த இவர், தீவிர முயற்சிகள் எடுத்து சிறந்த கதைகளை தேர்வு செய்து, சிறப்பாக நடித்து, இன்று மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கங்குவா படத்தின் தீவிர ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதை தொடர்ந்து கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. ஏற்கனவே சூரரை போற்று ஹிந்தி ரீமேக் படத்தில் கேமியோ ரோலில் நடித்து சூர்யா பாலிவுட்டில் அறிமுகமானார்..

இனி இங்க தான்..

இந்த நிலையில் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த சூர்யா, ஆம் தற்போது, 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை தொடர்ந்து , நல்ல கதைகள் ஹிந்தியில் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

தமிழில் இவருக்கு சூரரை போற்று படத்திற்கு பிறகு, நல்ல கதைகள் அமையவில்லை. மேலும் இங்கு உள்ள தியேட்டர் ஓனர்களுடன் பஞ்சாயத்தும் ஆனது. இதை தொடர்ந்து, பாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்து, மும்பை போய் செட்டிலானார்.

தற்போது, ஹிந்தியில் அடுத்தடுத்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதன் மூலம் இவர் தமிழுக்கு டாடா கட்டிவிட்டார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள், ‘ஆமாம்.. ஒருவர் இருக்கும் வரை அவரை பயன்படுத்திக்கொள்வதில்லை. போன பின்பு லபோ திபோ ன்னு அடித்து கொள்ளவேண்டியது..’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News