வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

போலீஸிடம் சிக்கிய எதற்கும் துணிந்தவன் படக்குழு.. விசாரணையில் வெளிவந்த உண்மை!

சென்னை கோயம்பேடு பகுதியில் வழக்கமாக அவ்வப்போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. கொரனா ஊரடங்கு காரணமாக இப்போது வாகனச்சோதனை அடிக்கடி நடந்து வருகிறது.

அப்படியான வாகன சோதனையில் சந்தேகப்படும் படியாக ஒரு கோணிப்பையில் சில பொருட்கள் மூடி வைக்கப்பட்டு ஒரு பைக்கில் கொண்டு வருவதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் விசாரனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் படியான பொருள் சூட்டிங் ஸ்பாட்டில் பயன்படுத்தப்படும் போலி துப்பாக்கி என்பதும் கொண்டு வந்த நபர் இயக்குனர் பாண்டியராஜின் உதவியாளர் என்பதும் தெரியவந்தது.

suriya-pandiraj-cinemapettai
suriya-pandiraj-cinemapettai

அதனையடுத்து தேவையான பேப்பர்கள் இல்லாததால் சிறிது நேரம் சலசலப்பு நீடித்தது. விசாரித்த போது அந்த நபரின் பெயர் விக்டர் என்பதும் காரைக்குடியில் சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படபிடிப்பு நடந்து வருகிறது.

அதற்காகவே இந்த போலி துப்பாக்கிகளை கோயம்பேட்டில் இருந்து பஸ்ஸில் போட்டு விட வந்ததாகவும் தெரிவித்தார். பார்ப்பதற்கு நிஜத்துப்பாக்கிகளை போலவே இருப்பதால் இவற்றை பார்த்த உடன் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Trending News