வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

யார் கதறினாலும் விதை போட்டது அமிர் தான்.. மீண்டும் அறுவடை செய்யப் போகும் சூர்யா குடும்பம்

Surya – Ameer : இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் கார்த்தி இருவருக்குமே மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது பருத்திவீரன் தான். கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றிருந்தது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு பருத்திவீரன் படத்தில் அமீர் பொய் கணக்கு காட்டியதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் பருத்திவீரன் படம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது அமீர் தனது சொந்த பணத்தை வைத்து தான் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுக்கு எதிராக இயக்குனர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி போன்றோர்கள் சரமாரியான கேள்விகளை முன் வைத்தனர். இதை தொடர்ந்து ஞானவேல் ராஜா அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும் படியாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Also Read : கங்குவாவில் அஜித்தை ஓவர்டேக் செய்த சூர்யா.. 400 கோடிக்கு மேல் எகிரும் பட்ஜெட்

இது சூர்யா குடும்பத்தின் கட்டாயத்தின் பெயரில் தான் அறிக்கை விட்டதாக கூறப்பட்டது. மேலும் அதோடு பிரச்சனை முடிந்த நிலையில் இப்போது மீண்டும் பருத்திவீரன் படத்தை மெருகேற்றி ரீ ரிலீஸ் செய்ய உள்ளனராம். பருத்திவீரன் படத்திற்கு விதை போட்டது அமீர் தான். இதனால் அவர் மன ரீதியாகவும், பணரீதியாகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

மேலும் பருத்திவீரன் படத்தில் அமீர் செலவு செய்த தொகையை சூர்யா குடும்பம் கொடுப்பதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இப்பொழுது பருத்திவீரன் மறு வெளியீட்டின் பெரிய தொடர்பை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அமீர் போட்ட விதையை மீண்டும் அறுவடை செய்ய இருக்கிறது சூர்யா குடும்பம். இந்த தொகையை அமீருக்கு கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : சென்னை அணியை வாங்கிய சூர்யா.. சிவகுமார் குடும்பத்தில் அடிப்பிடி சண்டை வராத குறைதான்

Trending News