வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோவை ஓரங்கட்டிய கங்குவா.. ட்விட்டரை ஆட்சி செய்த சூர்யா

சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் கங்குவா படம் உருவாகி வருகிறது. இப்படம் பத்து மொழிகளில் 3d அனிமேஷனில் உருவாகிறது. சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக, கனவு படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படத்தில் நிறைய அனிமேஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. பாலா, சூர்யா கூட்டணியில் வணங்கான் படம் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் சில காரணங்களினால் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார். அதனால் சிலர் பாலா படத்தை நழுவ விட்டதால் சூர்யாவின் அடுத்த படங்கள் எப்படி இருக்கும் என்று மோசமாக விமர்சித்து வந்தனர்.

Also read: எதிர்பார்ப்பை மிரளவிடும் சூர்யா 42.. அட்டகாசமான அப்டேட் கொடுத்த டீம்

அப்போதுதான் சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் பிரம்மாண்டமாக படம் உருவாக உள்ள அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சூர்யாவை காட்டிலும் விஜய்க்கு தான் ரசிகர்கள் அதிகம். அதுவும் மாஸ்டர் படம் தந்த மாபெரும் வெற்றியால் மீண்டும் லோகேஷ் மற்றும் விஜய் இணைந்துள்ள லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இமயமலை அளவுக்கு உள்ளது.

இந்தப் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ட்விட்டரில் பயங்கர ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும் டைட்டில் முதல் படப்பிடிப்பில் இருந்த வெளியாகும் புகைப்படங்கள் எல்லாமே இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலானது. லியோ படத்தை விட அதிகமாக கங்குவா படம் ட்விட் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் லியோ விஜய்யை சூர்யா ஓரம் கட்டி உள்ளார். சூர்யாவுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்பதை அவரே நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

அந்த வகையில் கங்குவா படத்திற்கு இப்போதே ஹைப் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் கங்குவா படத்தை முடித்த கையோடு சூர்யா வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்போது வெளியான கிளிம்ஸ் வீடியோவால் கங்குவா படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் நச்சரிக்க தொடங்கி விட்டனர்.

Also read: எப்டுறா! கங்குவா டைட்டில் 1983-ல் வச்சிட்டாங்களா? அர்த்தத்தை பார்த்தா பெரிய சம்பவமா இருக்கும் போல

Trending News