ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ஆதி புருஷால் வந்த சுதாரிப்பு.. சிறுத்தை சிவாவுக்கு வார்னிங் கொடுத்த சூர்யா

Actor Suriya: பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் 3டி தொழில்நுட்பம் கொண்டு உருவான ஆதி புருஷ் கடந்த மாதம் வெளியானது. ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் டீசர், ட்ரைலர் ஆகியவற்றால் பல விமர்சனங்களை சந்தித்தது.

ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அப்படம் சிறு பிள்ளைகள் பார்க்கும் பொம்மை படம் போல் இருந்ததால் ரசிகர்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தாமல் ராமாயணத்தை சொதப்பிய பட குழு வசூலிலும் பலத்த அடி வாங்கியது.

Also read: சூழ்நிலையை பொறுத்து உதவனும்.. சந்தடி சாக்கில் விஜய்யை சீண்டிய சூர்யா

அந்த வகையில் இந்த படத்திற்கு எழுந்த விமர்சனங்களை பார்த்து தற்போது கங்குவா பட குழு கொஞ்சம் அரண்டு தான் போயிருக்கிறார்களாம். ஏனென்றால் வரலாற்று பின்னணியில் 3டி தொழில்நுட்பம் கொண்டு எடுக்கப்படும் இப்படமும் ஆதிபுருஷ் போல் தான் இருக்கும் என்ற பேச்சு மறைமுகமாக திரையுலக வட்டாரத்தில் கிளம்பி கொண்டிருக்கிறது.

அதற்கு ஏற்றார் போல் மேக்கிங் காட்சிகளை பார்த்த சூர்யா கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறாராம். மற்றவர்கள் சொல்வது போல் டெக்னாலஜியில் இன்னும் கொஞ்சம் வளர வேண்டுமோ என்ற கவலை அவருக்கு இதன் மூலம் அதிகமாகிவிட்டதாம்.

Also read: மேடையிலேயே கண்கலங்கிய சிவகுமார்.. நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தலை குனிந்த கார்த்தி, சூர்யா

ஏனென்றால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருக்கிறது. அதிலும் சூர்யா ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். அதனால் சூர்யா இப்போது சிறுத்தை சிவாவுக்கு ஒரு வார்னிங் கொடுத்திருக்கிறார்.

அதாவது பிளாஷ்பேக் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்க வேண்டும், இல்லை என்றால் அடுத்த ஷெட்யூலில் நடிக்க மாட்டேன் என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இதனால் அரண்டு போன இயக்குனர் தற்போது படவேலைகளில் இன்னும் அதிக கவனமாக இருக்கிறாராம். இருப்பினும் சூர்யா, சிறுத்தை சிவாவால் சிறிது ஏமாற்றத்தில் தான் இருப்பதாக சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

Trending News