சிறுத்தை சிவா முதன்முதலாக நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா என்ற திரைப்படத்தை இயக்குகிறார் என்ற செய்தி வெளியான போதே பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தன. இந்த படம் நவம்பர் 14 அன்று வெளியாகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் படுபயங்கரமாக நடந்து வருகிறது. சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திசா பதானி, பாபி தியோள், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருந்தன. வரலாற்று பின்னணியில் அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இரு பாகங்களாக இந்த படம் உருவாகி உள்ளது.
படத்தில் பிரான்சிஸ் மற்றும் கங்குவா என இரண்டு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே படம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்து வருகிறது. 20 கோடி செலுத்தினால் தான், படம் வெளியாகும் என்று கோர்ட் அதிரடி உத்தரவிட்டிருந்தது.
இவ்வளவு கம்மி சம்பளமா?
வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்புள்ளது. ப்ரீ-புக்கிங்கிலே படம் பட்டையை கிளப்புகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஜ்புரி என மொத்தம் 35 மொழிகளில் கங்குவா படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது.
இப்படி பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படத்தில், நடிகர்களும் பிரம்மாண்ட சம்பளத்தை பெற்றிருப்பார்கள் என்று தான் பெரும்பாலானவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் அது தான் இல்லை. சூர்யா வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட இந்த படத்திற்கு மிக குறைவான சம்பளத்தையே பெற்றிருக்கிறார்.
தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கி வரும் நிலையில், அவர்களை விட மிகவும் கம்மியான தொகையை இந்த படத்தில் சம்பளமாக பெற்றுள்ளார் சூர்யா. இரண்டு ஆண்டுகள் இந்த படத்துக்காக உழைத்தபோதிலும், கங்குவா படத்தில் நடிக்க சூர்யா பெற்ற சம்பளம் ரூ.39 கோடி மட்டுமே. இதை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
ஆனால் ஆள் இல்லாத குதிரை ஆத்துல இறங்காது என்ற சொலவடைக்கு ஏற்ப, சூர்யா சும்மாவெல்லாம் இந்த சம்பளத்திற்கு ஒத்துக்கவில்லை. அதற்க்கு வேற ஒரு காரணம் உள்ளது, அது என்னவென்றால், கங்குவா படத்தின் லாபத்தில் இருந்து ஷேர் வாங்கவும் சூர்யா டீல் போட்டுள்ளார். தெளிவாக தான் இருக்கிறார். இதே முடிவை, பல நடிகர்கள் எடுத்தால், தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியை குறைத்துக்கொண்டு இருக்க தேவை இல்லை.