ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அடுத்த வருடம் சூர்யாவிற்கு வசந்த காலம் தான்.. அஜித், விஜய்க்கு கிடைக்காத யோகம்

Surya gets things that ajith and vijay don’t get: ‘இவரெல்லாம் ஹீரோ மெட்டீரியலே இல்லை’ என தொடக்க காலத்தில் ஏகப்பட்ட கேலி கிண்டலுக்கு ஆளான சூர்யா, ‘நந்தா’ படத்திற்கு பிறகு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார். அதிலும் லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் சில நிமிடம் மட்டுமே திரையில் தோன்றினாலும் இவருடைய நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது.

இதனால் ரசிகர்களிடம் நடிப்பு அரக்கனாகவே மாறிய சூர்யாவிற்கு இப்போது தல, தளபதிக்கு கிடைக்காத பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. சூர்யா தற்போது நடிக்கும் கங்குவா படம் அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக கங்குவா படத்தை தயாரிக்கிறது.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. உலக அளவில் 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஐமேக்ஸ், 3டி முறையில் இதை வெளியிட உள்ளனர். இதற்கு முன்பு இதுபோன்ற பட வாய்ப்பு வேறு எந்த நடிகர்களுக்கும் கிடைக்கவில்லை. இதில் சூர்யா முதல் முதலாக 350 கோடி பட்ஜெட்டில் நடிப்பதுடன், 13 கெட்டப்பில் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டுகிறார்.

Also Read: அஜித்துக்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் கும்பல்.. இறப்பில் கூட இப்படி ஒரு விளம்பரமா?

தல, தளபதிக்கு கிடைக்காத விஷயங்கள் சூர்யாவுக்கு கிடைக்குது

இந்தப் படம் தான் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பது, இதன் ஃபர்ஸ்ட் டீசரை பார்த்த போதே தெரிந்து விட்டது. அந்த அளவிற்கு படத்தோட குவாலிட்டி தரமாக இருக்கிறது. அஜித், விஜய்க்கு கூட கிடைக்காத இந்த நல்ல விஷயம் சூர்யாவிற்கு கிடைத்துள்ளது.

இவ்வளவு நாள் சூர்யாவை டாப் ஹீரோவாக யாருமே பார்க்கவில்லை, இருந்தாலும் ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்பதை ஆணித்தனமாக நம்பியவருக்கு கங்குவா படம் தான் வரப்பிரசாதமாக கிடைத்திருக்கிறது. இதன் ரிலீசுக்கு பின் பாலிவுட், ஹாலிவுட் என சூர்யா கொடிகட்டி பறக்க போகிறார்.

Also Read: இந்த ஒரே வருடத்தில் 2500 கோடி வசூல்.. கிங் ஆப் இந்தியன் சினிமா என நிரூபித்த ஒரே நடிகர்

Trending News