செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பாலிவுட்டில் களமிறங்கும் சூர்யா.. அப்ப சொன்னது எல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா

சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பது மட்டுமல்லாமல் பல நல்ல கதைகளை தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் அவர் தயாரித்து நடித்திருந்த சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். இப்படத்தை தமிழில் தயாரித்திருந்த அதே 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யா தயாரிக்கிறார். இதன் மூலம் சூர்யா ஒரு தயாரிப்பாளராக பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் சூர்யா ஒரு நடிகராகவும் பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி வருகின்றனர்.

அதாவது சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தின் போது சூர்யாவிடம் ஹிந்தியில் நடிக்கும் ஆசை இருக்கிறதா என்று பலரும் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சூர்யா தென்னிந்திய சினிமாவிலேயே பிரபலம் ஆவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது எதற்காக ஹிந்தியில் நான் நடிக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார். இதன் மூலம் சூர்யாவுக்கு இருக்கும் தமிழ் பற்றை நினைத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் தற்போது சூர்யா ஹிந்தியில் நடக்கப்போவதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்ப சொன்னது எல்லாம் வெறும் வாய் வார்த்தை மட்டும் தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கான பதிலை சூர்யா விரைவில் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News