வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஜோதிகா வாய்ப்பை தட்டிப்பறித்த சாய் பல்லவி.. சூர்யாவுடன் கூட்டணி

மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கிய இவர் இப்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் கார்கி திரைப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிளாக்கி ஜெனி ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது. சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர்.

அதாவது அவர்களின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது. அந்த வகையில் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த தகவலை சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதலில் இந்த திரைப்படத்தில் ஜோதிகா நடிப்பதாக இருந்தது. ஆனால் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருவதால் ஜோதிகா தற்போது சூர்யாவுடன் இணைந்து தயாரிப்பு பணியில் மட்டும் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஏற்கனவே சாய்பல்லவி சூர்யாவுடன் இணைந்து என் ஜி கே திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News