சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. 2022ஆம் ஆண்டுக்குப் பின் சூர்யாவிற்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. எதற்கும் துணிந்தவன் நடித்ததுதான் கடைசி படம். கமல் நடித்த விக்ரம் மற்றும் ராக்கெட்டரி படத்தில் கெஸ்ட் ரோல் மட்டுமே பண்ணியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சூர்யாவிற்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இப்பொழுது வரிசையாக அடுத்தடுத்து சூர்யாவிற்கு மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி இப்பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் எடுக்க தயாராகி வருகிறார். இந்த படத்திற்கு நயன்தாரா அதிக சம்பளம் கேட்பதால் வேறு ஒரு ஆர்ட்டிஸ்ட்டை தேடி வருகிறார். இதனிடையே அந்த படத்திற்கு மாசாணி அம்மன் என்று பெயர் வைத்துள்ளார்.
ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி தளபதி விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லி இருக்கிறார். அந்த கதையை விஜய் டெவலப் பண்ண சொல்லியதோடு சரி, அதன் பின் மூச்சு காட்டவில்லை. இப்பொழுது அந்த கதையை ரெடி பண்ணி ஹீரோவை மாற்றிவிட்டார் பாலாஜி.
3 படத்தை வரிசையாய் வெளியிடும் சூர்யா
அந்த கதையில் இப்பொழுது சூர்யா நடிக்க போகிறார். எல்லாம் முடிவாகி சூர்யாவும் கால் சீட் கொடுத்துவிட்டார். நவம்பர் 16ஆம் தேதி இந்த படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அடுத்தடுத்து சூர்யாவிற்கு மூன்று படங்கள் வெளிவர இருக்கிறது. கங்குவா நவம்பர் 14ஆம் தேதியும், 2025 பொங்கலுக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சூர்யா 44 படமும். அதன்பின் ஆர் ஜே பாலாஜியின் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலும் ரிலீசாக இருக்கிறது.
ஏற்கனவே என் ஜி கே படத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்த ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அந்த படத்தின் நஷ்டத்தை சரிகட்ட ஆர் ஜே பாலாஜி சூர்யாவிற்கு கொக்கி போட்டு இப்படி ஒரு திட்டத்தை தீட்டி சரண்டர் ஆக்கியுள்ளார். இதற்காக 40 நாட்கள் மட்டுமே கால் சீட் கொடுத்து இருக்கிறார் சூர்யா.