வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஜய், அஜித்தையும் தாண்டி ஒருபடி மேலே போன சூர்யா.. மொத்த கோடம்பாக்கத்துக்கும் கொடுத்த அதிர்ச்சி

அஜித் ,விஜய் இவர்கள் இருவரையும் தாண்டி இன்று ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆலமரம் போல் இருந்து வருகிறார் சூர்யா. சமீபத்தில் நடந்து முடிந்த வாரிசு படத்தின் ஆடியோ விழாவில் கிட்டத்தட்ட 6000 டிக்கெட்டுகளில் 5000 டிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு விஜய் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இவர் ஒரு விதம் என்றால் அஜித் வேறொரு விதம். இவர் ரசிகர் மன்றம் ஏற்றுக் கொள்வதில்லை, ரசிகர்களை சந்திப்பது இல்லை, அப்படி இருந்தும் இவர் பின்னாடி இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் பெரும் ஆச்சரியம் தான். எப்போதாவது ஏதாவது ஒரு ஸ்டேட்மென்ட் ட்விட்டரில் பதி விடுவார் அதை வைத்துக் கொண்டே இவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

Also Read : இப்ப அஜித் இல்ல, ரஜினி ரசிகர்களை சீண்டி விட்ட தயாரிப்பாளர்.. வாரிசு மேடையில் வேண்டாத பேச்சு

இப்பொழுது அஜித் விஜய் போன்றவர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் சூர்யாவிற்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். இந்த ரசிகர்களை சூர்யா தலையில் தூக்கிவைத்து ஆடுகிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் குடும்பத்தார் போல் பார்த்து வருகிறார்.

சூர்யா சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து இருப்பது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைத்து மாவட்ட ரசிகர்களையும் சமீபத்தில் அழைத்து சூர்யா ஒரு சந்திப்பு நடத்தி இருக்கிறார். அப்பொழுது அவர் அறிவித்த சலுகைகள் தான் அனைத்து நடிகர்களையும் தூக்கிவாரிப்போட்டுள்ளது.

Also Read : பாடல் வரி மூலம் பதிலடி கொடுக்கும் விஜய், அஜித்.. பற்றி எரியும் சோசியல் மீடியா

கிட்டத்தட்ட 2000 நிர்வாகிகளை சந்தித்த சூர்யா தனது ரசிகர்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து அசத்தி இருக்கிறார். தனது ரசிகர்கள் வீட்டில் யாராவது ஒருவர் படித்து இருந்தால் அவர்களை மேற்கொண்டு படிக்க வைப்பதாகவும், அப்படி யாராவது படித்து முடித்து இருந்தால் அவர்களுக்கு அரசு வேலை வாங்குவதற்கு உதவி செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கு மெடிகல் பாலிசி எனப்படும் மருத்துவரீதியான உதவியும் செய்யப் போகிறாராம். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்கள் வீட்டில் யாராவது ஒரு ரத்த உறவு இறந்துவிட்டார் என்றால், ஒரு பெரும் தொகை அன்றே கிடைக்கவும் வழி செய்திருக்கிறாராம். இப்படி சூர்யா பேசியதைக் கேட்டு மொத்த கோடம்பாக்க நடிகர், நடிகைகளும் சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.

Also Read : அந்த ஒரு விஷயத்தில் தான் ஜாதி கிடையாது.. வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

Trending News