திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ஒரு வழியா நிம்மதி பெருமூச்சு விட்ட சூர்யா.. ஜெயம் ரவிக்கு முன்னரே சிங்கத்தை சுற்றிய மாயவலை

கடந்த சில மாதங்களாக சூர்யாவை கெட்ட நேரம் பிடித்து ஆட்டி வருகிறது. இவர் தேடி செல்லும் இயக்குனர்களும், இவரை தேடி வரும் இயக்குனர்களும் ஏதாவது பிரச்சனையினால் இருவரும் ஒருவருக்கொருவர் மனக்கசப்பில் பிரிந்து விடுகிறார்கள். மும்பை பக்கம் சென்று விடலாமா என யோசனையில் இருக்கிறார் சூர்யா.

தெலுங்கு, ஹிந்தி என எல்லா பக்கமும் இவருக்கு அழைப்பு வந்த போதிலும் எதுவுமே செட்டாகாமல் திணறி வருகிறார். ஹிந்தியில் கர்ணா என்ற ஒரு படத்தில் கமிட்டாகி இருந்தார் இப்பொழுது அதுவும் நடக்கவில்லை. அதுபோக ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கன்னட படம் பண்ணுவதாக இருந்தது அதுவும் கைகூடி வரவில்லை.

ஜெயம் ரவிக்கு முன்னரே சிங்கத்தை சுற்றிய மாயவலை

ஏற்கனவே பாலாவுடன் ஆரம்பிக்கப்பட்ட வணங்கான் படம் டிராப் ஆகிவிட்டது. அதன் பின்னர் சுதா கொங்காராவுடன் கமிட்டான புறநானூறு படமும் கைவிட்டுப் போனது. இப்படி நாலா பக்கமும் சூர்யாவிற்கு ஷட்டர்கள் அடைக்கப்பட்டது. இதனால் சமீப காலமாக விரக்தியில் இருந்து வந்தார் சூர்யா.

கங்குவா படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அந்த படம் சூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அந்த படத்தை முடித்து கொடுத்த சூர்யா அதன் பின் கார்த்திக் சுப்புராஜ் உடன் தன்னுடைய 44 வது படத்தில் இணைந்தார்.

இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இவருடைய போர்ஷன் அனைத்தும் முடிந்து விட்டது. மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. சூர்யா தனது வேலையை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜை ஆரத்தழுவியுள்ளார். சமீப காலமாக சூர்யா நிறைய அழுத்தத்தை அனுபவித்துள்ளார். இந்த படம் தான் சொன்ன நேரத்திற்கு ஆரம்பித்து அதற்கு முன்பாக முடிந்து வெற்றி அடைந்தது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது சிங்கம்.

சமீபத்தில் ஒரு செலிபிரிட்டியாக ஜெயம் ரவி படாத பாடு பட்டு வருகிறார். அவருக்கு குடும்பம் மற்றும் கேரியர் இரண்டிலும் பிரச்சனை. ஆனால் சூர்யாவிற்கு சினிமா கேரியர் மட்டும் சில காலமாக பிரச்சனையில் இருந்து வந்தது. இப்பொழுது அந்த மாய வலையில் இருந்து மெல்ல மெல்ல வெளிவருகிறார் சூர்யா.

Trending News