திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சூர்யாவுக்கு கதாநாயகியாகும் கார்த்தி பட குழந்தை நட்சத்திரம்.. ஆச்சரியமூட்டும் புகைப்படம்

சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். விருமன் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

அதேபோல் சூர்யாவும் தனது படங்களில் பிஸியாக உள்ளார். தற்போது பாலா இயக்கி வரும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தார்.

இப்படத்தில் சூர்யா மீனவனாக நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர் தெலுங்கில் வெளியான உப்பென்னா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரியர் என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது பாலா படத்தில் கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்.

ஆனால் கீர்த்தி ஷெட்டி குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் கார்த்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது அண்ணன் சூர்யாவுக்கு கதாநாயகியாக நடிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் காலங்காலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் அந்த ஹீரோ உடனே ஜோடியாக நடித்து வருகின்றனர்.

kirthi shetty
Kirthi Shetty

Trending News