வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

என்ன பப்ளிக்ல மானத்தை வாங்குறாரு.. சிவக்குமாரின் பேச்சை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட சூர்யா

கங்குவா பட விழாவின் போது நடிகர் சிவக்குமார் சூர்யாவைப் பற்றிக் கூறிய சம்பவம் சமூக வலைதளத்தில் பரவலாகி வருகிறது.

கங்குவா ஆடியோ விழா

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் 38 மொழிகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் கங்குவா தான் வட இந்தியாவில் அதிக மொழிகளில் வெளியாகும் படம் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, இதன் போஸ்டர், டீசர், டிரைலர், 2 பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் புரமோசன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். யூடியூப்கள், மீடியாக்கள், பத்திரிக்கைகள், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் கங்குவா பற்றிய பேசு பொருளாகவே இருக்கின்றன.

இப்படம் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் கூறியதால் இப்படத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழில் இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கும் முதல் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அக்டோபர் 26 ஆம் தேதி நடந்தது. இதில் கங்குவா படக்குழுவினர் மற்றும் சிவகுமார், கார்த்தி மற்றும் சூர்யாவின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவக்குமார் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறி நடிகர் சிவக்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; ’’ சூர்யாவுக்கு லயோலா கல்லூரியில் பி.காம் படிக்க விண்ணபிக்க சென்றபோது இடமில்லை என்று கூறினார்கள். அதன்பின்னர் நான் கல்லூரி முதல்வரை சந்தித்து என்ன பிரச்சனை என கேட்டேன். அதற்கு அவர், சிவாஜி கணேசன் மகன் பி.காம் முடிக்காமல் பாதியிலேயே கல்லூரிலிருந்து போய்விட்டார். அதேபோல் இன்னும் 2 பிரபலங்களின் மகன்களும் பாதியிலேயே சென்றுவிட்டனர். உங்கள் மகனும் அப்படி செய்வார் என்றுதான் என்று கூறினார்.

இல்லை சார்..என் மகன் பி.காம் முடிப்பான் என்று சொல்லி கல்லூரியில் சீட் வாங்கினேன்.ஆனால் கல்லூரி இறுதியாண்டில் 4 அரியர் வைத்துவிட்டான். அதன்பின் அந்த அரியர் அனைத்தையும் எழுதி பி.காம் முடித்தான்’’ என்று கூறினார். இதைக் கேட்ட சூர்யா தலையில் கை வைத்து கொண்டு சிரித்தார். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News