வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வாடிவாசல் படத்திற்காக கேரளா வரை சென்ற சூர்யா.. புதிய முயற்சி கை கொடுக்குமா?

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டாலும் சர்வதேச அளவில் பல அதிர்வலைகளை உருவாக்கியது.

இதனால் நடிகர் சூர்யா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன் காரணமாக அவர் கடந்த மாதம் தன் மனைவி ஜோதிகாவுடன் ரிலாக்சாக துபாய்க்கு டூர் சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி பொழுதை கழித்த அவர்கள் இருவரும் சென்னை திரும்பும் வழியில் கேரளாவுக்கு சென்றுள்ளனர்.

நடிகர் சூர்யாவுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் உண்டு. அங்கு அவர் ஜோதிகாவுடன் பீச்சில் நடைப்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு வைரலாகி வந்தது. கேரளாவில் சில நாட்கள் தங்கியிருந்த சூர்யா அங்கு பிரபலமான களரி சண்டையை ஆர்வத்துடன் கவனித்துள்ளார்.

சுமார் 2 மணி நேரம் சூர்யாவும், ஜோதிகாவும் அந்த வித்தையை கவனித்துள்ளனர். மேலும் அந்த களரி வித்தையின் சில நுணுக்கங்களையும் சூர்யா தெரிந்து கொண்டுள்ளார். அவர் தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

இப்படம் இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் திரைப்படம் ஆகும். இப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்திற்காக தான் கேரள களரி வித்தையை ஆர்வத்துடன் கவனித்துள்ளார். மேலும் புதுவருடத்தில் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் பற்றிய அறிவிப்பும் வெளிவர இருக்கிறது.

Trending News