புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இப்படி ஒரு மட்டமான வெற்றி தேவையா.? விருமன் படக்குழுவை கண்டபடி பேசிய பயில்வான்

சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் கார்த்தி நடித்த விருமன் படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தை முத்தையா இயக்க அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சூரி, ராஜ்கிரன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற வசூல் சாதனை படைத்த வருவதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நெகட்டிவ் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மக்கள் கூட்டம் மட்டும் திரையரங்குகளில் அலைமோதுகிறது.மேலும் படத்தின் வசூல் முதல் நாள் 8 கோடி, இரண்டாம் நாள் 8 கோடி என ஆக மொத்தம் 16 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விடுமுறை நாட்கள் என்பதால் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக உள்ளது.

மேலும் விருமன் படம் வசூலில் வெற்றி என சக்சஸ் பார்ட்டியை படக்குழு கொண்டாடி வருகிறது. ஆனால் சில அரசியல்வாதிகள் போல் ரசிகர்களுக்கு குவாட்டர், பிரியாணி வாங்கி கொடுத்து படத்தை பார்த்த பின் தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது படம் சூப்பர், குடும்பப் படம், 100 நாள் கண்டிப்பாக ஓடும் என்று சொல்ல சொல்லியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் நடித்த சில நடிகர், நடிகைகளையும் புகழ்ந்து பேச சொல்லியுள்ளனர். படத்தின் வசூலுக்காக சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் இதுபோன்ற செய்துவருவதாக பயில்வான் ரங்கநாதன் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

மேலும் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக படத்தின் வசூலை அதிகமாக சொல்வதாகக் கூறியுள்ளார். ஆனால் பயில்வான் சொன்னதற்கு எதிராக சூர்யா ரசிகர்கள் கொந்தளித்தாளும் ,மறுபுறம் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் வசூலை வாரி குவிப்பது சந்தேகமாக தான் இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.

Trending News