புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரகசிய சந்திப்பால் கோபத்தில் சூர்யா.. விஜய் மேனேஜர் ஜெகதீஷ் செய்யும் அழிச்சாட்டியம்

Actor Suriya: சினிமாவில் டாப் நடிகர், நடிகையாகுவதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் திரையுடரில் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் நடக்கும். அதிலும் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை குலைக்கும் வகையில், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் செய்திருக்கும் வேலை அவரை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கின்றது.

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் மிகப்பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

Also Read: கோடீஸ்வர பெண்களை வளைத்துப் போட்ட 5 நடிகர்கள்.. தளபதியை விட பெத்த கையாக இருக்கும் மாமனார்

தற்போது சூர்யா கங்குவா படத்தில் பிசியாக இருக்கும் நேரத்தில் ஒரு செய்தி அவருக்கு இடியாய் விழுந்தது. கங்குவா படத்திற்கு முன்பே சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்திற்கு ஒரு சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியதால் சூர்யா, கங்குவா படத்திலும் வெற்றிமாறன் விடுதலை படத்திலும் கமிட் ஆகி விட்டார்.

இருப்பினும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப் போகும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இதற்காக சுதா கொங்காரா படத்தை கூட தள்ளி வைத்திருக்கிறார்.

Also Read: லோகேஷ் ஆசையில் மண் அள்ளி போடும் விஜய்.. நானே ராஜா நானே மந்திரி என ஈகோவில் தளபதி போடும் ஆட்டம்

ஆனால் விஜய் மேனேஜர் ஜெகதீஷ் வெற்றிமாறனை ரகசியமாக மூன்று முறை சந்தித்துள்ளார். விஜய் வெற்றிமாறனுக்கு தூது விட்டாரா அல்லது ஜெகதீஸ் சொந்தமாக படம் எடுக்கிறாரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இப்பொழுது வெற்றிமாறன் விஷயத்தை வெளியில் கொண்டு வரும் வரை சூர்யாவின் கோபம் தனியாது.

இருப்பினும் சூர்யாவிற்கு தெரியாமல் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ படத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் ஏதாவது செய்து விடுவாரோ என்பதுதான் இப்போது அனைவரின் கவலையாக இருக்கிறது. இதற்கெல்லாம் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் செய்யும் அழிசாட்டியம் தான் காரணம்.

Also Read: லியோவை ஓரம் கட்ட வரும் தளபதி 68.. லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் வெங்கட் பிரபுவின் இந்த ஸ்கிரிப்ட்

Trending News