வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எவ்வளவுதான் நான் பொறுத்து போறது, உன் சங்காத்தமே வேண்டாம்.. பாலா வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சியில் சூர்யா

சூர்யா மற்றும் பாலா காம்போவில் 19 வருடங்கள் கழித்து உருவாகி வந்த வணங்கான் படத்தைக் குறித்து பல மாதங்களாக புது புது பிரச்சனைகள் கிளம்பியது. ஆகையால் இந்த படம் தொடர வாய்ப்பு இருக்கிறதா? சூர்யா படத்திலிருந்து விலகிறாரா? என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சூர்யாவின் 41-வது படமான வணங்கான் படத்திற்கு 40 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்த நிலையில், இப்போது அந்தப் படத்தை வேண்டவே வேண்டாம் என்று ஊத்தி மூடி விட்டனர். சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தால் பாலா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த வணங்கான் படத்தின் கதையில் நிகழ்ந்த சிறு மாற்றத்தினால் இந்தக் கதை சூர்யாவிற்கு உகந்ததாக இருக்குமா என்கின்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

Also Read: கேட்டதை கொட்டி கொடுத்த பாலா.. பல நாளாகியும் மதிக்காத சூர்யா.!

ஆகையால் தற்போது வணங்கம் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர். இதில் பலருக்கு வருத்தம் இருந்தாலும் அனைவரின் நலன் கருதியே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் நந்தாவில் பாலா பார்த்த சூர்யா மற்றும் பிதாமகனில் ரசிகர்கள் பார்த்த சூர்யா போல, வேறு ஒரு தருணத்தில் பாலா சூர்யாவின் கூட்டணி மீண்டும் இணையும் என்றும் அறிக்கை ஒன்றை இயக்குனர் பாலா வெளியிட்டுள்ளார். அப்படி என்றால் வணங்கான் படத்தை இனிமேல் தொடராமல் அதை அப்படியே நிறுத்தப்படுகிறது.

பாலா வெளியிட்ட அறிக்கை

bala-statement-cinemapettai
bala-statement-cinemapettai

Also Read: வணங்கான் படத்திற்கு நோ சொன்ன சூர்யா.. புதிய இயக்குனருடன் சேரும் கூட்டணி

இந்த அறிக்கைக்கு சூர்யாவும், ‘பாலா அண்ணனின் உணர்வுகளுக்கும் முடிவெடுக்கும் மதிப்பு கொடுத்து வணங்கான் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். எப்போதும் பாலா அண்ணனுடன் துணை நிற்பேன். என்றும் பதில் ட்விட் செய்திருக்கிறார்.

எப்படி பார்த்தாலும் இது வணங்கான் படத்தை தயாரித்த சூர்யாவின் முடிவாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆகையால் சூர்யா தான் பாலாவை வணங்கன் படத்திலிருந்து கழட்டி விட்டு விட்டார். ஏற்கனவே இவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் தொடர் மோதல் ஏற்பட்டதால் அதை மனதில் வைத்து தான் சூர்யா, எவ்வளவுதான் நான் பொறுத்து போறது, உன் சங்காத்தமே வேண்டாம் என்று கழட்டி விட்டுள்ளார்.

சூர்யா பதில் ட்விட்

suriya-twit-cinemapettai
suriya-twit-cinemapettai

Also Read: ரத்தன் டாடா சூர்யா இல்லையா.. அதிர்ச்சி தகவலை கூறிய கே ஜி எஃப் பட நிறுவனம்

Trending News