புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பாலாவின் வகையறாவையே வச்சு செய்யும் சூர்யா.. வணங்கான் படத்திற்கு பிறகு குளறுபடியான அடுத்த படம்

சூர்யாவின் 41-வது படமான வணங்கான் படத்திற்கு 40 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்த நிலையில், இப்போது அந்தப் படத்தை வேண்டவே வேண்டாம் என்று ஊத்தி மூடி விட்டனர். சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தால் பாலா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த வணங்கான் படத்தின் கதையில் நிகழ்ந்த சிறு மாற்றத்தினால் இந்தக் கதை சூர்யாவிற்கு உகந்ததாக இருக்குமா என்கின்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

Also  Read: இறுதி சடங்கை செய்ய விடாமல் கொடுமைப்படுத்திய பாலா.. வெறுத்து போய் சாபம் கொடுத்த தயாரிப்பாளர்

ஆகையால் வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர். ஆனால் இப்போது சூர்யா பாலாவின் நண்பர்களின் படங்களையும் ஒதுக்குவதாக சொல்லப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் இந்தியாவுடன் திரிஷா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்தது.

மௌனம் பேசியதே படம் வெளிவந்து 20 வருடம் ஆகிறது. இதனை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க அமீர் முடிவு செய்துள்ளார். இதை சூர்யாவிடம் அமீர் கூற உடனே சரி என்று சொல்லி விட்டார் சூர்யா. இதனால் அதற்கான வேலைகளை தொடங்கினார் அமீர்.

Also  Read: சூர்யா, அதர்வாவின் இடத்தை தட்டிப்பறித்த பாலாவின் அடுத்த ஹீரோ.. விறுவிறுப்பாக தொடங்கும் வணங்கான்

ஆனால் சூர்யா, திடீரென போன் செய்து நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். காரணம் தற்போது அமீரின் நெருங்கிய நண்பரான பாலாவை வெறுத்த ஒதுக்குகிறார். இப்போது நடப்பதை எல்லாம் வைத்து பார்க்கும் போது பாலா மட்டுமல்ல பாலாவின் நண்பர்கள், பாலாவின் வகையறா யாராக இருந்தாலும் ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் சூர்யா.

அமீர்-பாலா இருவரும் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை நெருங்கிய நண்பர்கள். சற்றும் எதிர்பாராத அமீர் என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளாராம். இதனால் வேறு ஹீரோவை வைத்து எடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

Also  Read: எவ்வளவுதான் நான் பொறுத்து போறது, உன் சங்காத்தமே வேண்டாம்.. பாலா வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சியில் சூர்யா

Trending News