வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இது தான் எங்களோட ஆசையும், யோசிக்காம பண்ணிருங்க.. சூர்யா-க்கு வைத்த வேண்டுகோள்

ரசிகர்களின் Favourite Celebrity தம்பதிகளாக வளம் வருகின்றனர் சூர்யா மற்றும் ஜோதிகா. காதல் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்ற பேச்சு போயி, ஒரு கணவன் மனைவி, அப்பா அம்மா, ஒரு குடும்பம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து காட்டியுள்ளனர்.

இப்போதெல்லாம் காதலித்து திருமணம் முடித்த சில வருடங்களிலேயே பிரிந்து விடும் நிலையில், இவர்கள் காதல், உண்மையில் ஒரு Fairy Tale காதலாகவே உள்ளது. திருமணமாகி இத்தனை வருடம் கழித்தும் இவர்களை பார்த்து பொறாமை படைத்தவர்களே இல்லை. தினமும் திருஷ்டி கழிக்கும் படியான ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகின்றனர்.

பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்டப் பல படங்களில் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பின்பு இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு தேவ், தியா என இரு குழந்தைகள் உள்ளனர்.

மீண்டும் ஜோடி சேரும் ரியல் தம்பதிகள்

இந்தியா முழுவதும் நடிகர் சூர்யா தனது ‘கங்குவா’ பட புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பல ஸ்வாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வரும் சூர்யா, தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். இதை கேட்ட இயக்குனர்கள், முக்கியமாக GVM படுகுஷியாகிருப்பார்.

தனது மனைவி ஜோதிகாவுடன் மீண்டும் ஒரு முறை இணைந்து படம் நடிக்க வேண்டும் என்பது சூர்யாவின் நீண்ட நாள் ஆசையாம். இதை கேட்ட ரசிகர்கள் உற்ச்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். “அண்ணா.. அது உங்க ஆசை மட்டுமல்ல… எங்களுக்கும் அது தான் ஆசை.. ப்ளீஸ்.. யோசிக்காதீங்க.. சீக்கிரமா பண்ணுங்க..” என்று விருப்பத்தை கூறி வருகின்றனர்.

இதை தொடர்ந்து இயக்குனர்கள், கண்டிப்பாக இவர்களை வைத்து படம் பண்ண முன்வருவார்கள். GVM முதல் ஆளாக வந்து நிற்பார் என்று தான் தோன்றுகிறது. அப்படி இவர்கள் ஒன்றாக திரையில் தோன்றினால், ஆக்ஷன், குத்து பாட்டு என்று எதுவும் இல்லாமலே, 100 நாட்கள் ஓடிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News