Surya – Jyothika: ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தையை சூர்யா ஜோதிகாக்காகத்தான் கண்டுபிடிச்சி இருப்பாங்க போல. இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளின் அப்பா அம்மா என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.
90ஸ் கிட்ஸ்கள் மட்டும் இல்லாமல் 2k கிட்ஸ் வரை கொண்டாடும் நட்சத்திர தம்பதிகள் ஆக இவர்கள் இருக்கிறார்கள். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஆரம்பித்த இவர்களுடைய பயணம் இன்று வரை வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது.
சமூக வலைத்தளங்கள் வந்த காலத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே அதில் அவ்வளவு ஆக்டிவாக இருந்தது இல்லை. ஆனால் சமீப காலமாக ஜோதிகா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய பிட்னஸ் வீடியோக்களை அதில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு ஜோதிகா மற்றும் சூரியா சென்றிருந்தார்கள். அப்போது வெளியான புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அன்றைய நாளில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்தோடு சேர்த்து காக்க காக்க படத்தில் வரும் ஒன்றா இரண்டா ஆசைகள் பாட்டையும் இணைத்து இருக்கிறார். தற்போது இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அப்படியே இருபது வருஷத்துக்கு முன்னாடி இருந்த அன்புச்செல்வன் மற்றும் மாயாவை கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்களே என்று ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வைரல் ஃபோட்டோஸ்